Home /News /sports /

ஷேன் வார்னின் மரணம் இயற்கை மரணமே- பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்

ஷேன் வார்னின் மரணம் இயற்கை மரணமே- பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்

ஷேன் வார்ன்

ஷேன் வார்ன்

ஷேன் வார்னின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் இயற்கை மரணம் எய்தினார் என கூறியிருப்பதாக தாய்லாந்து போலீசார் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

    ஷேன் வார்னின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் இயற்கை மரணம் எய்தினார் என கூறியிருப்பதாக தாய்லாந்து போலீசார் திங்கள்கிழமை தெரிவித்தனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் தாய்லாந்திற்கு தனது தனிப்பட்ட பயணத்திற்காக சென்ற போது, வில்லாவில் நேரத்தை செலவழித்த தருணத்தில் வெள்ளிக்கிழமை திடீரென இறந்தார்.

    போலீஸ் லெப்டினன்ட் ஜெனரல் சுராசேட் ஹக்பர்ன், உதவி கமிஷனர் ஜெனரல், வார்னின் மரணம் பல நாட்களாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும், சந்தேகத்துக்கிடமான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் கூறினார்.

    பிரேதப் பரிசோதனையின் முடிவுகளை ஷேன் வார்னின் குடும்பத்தினரிடம் தெரிவித்ததாகவும் அவர்கள் பிரேத பரிசோதனை முடிவை ஏற்றுக்கொண்டதாக செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. அவரது உடல் ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பிறகு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    இன்று புலனாய்வாளர்கள் பிரேத பரிசோதனை முடிவைப் பெற்றனர், அதில் மரணத்திற்கான காரணம் இயற்கையானது என்று மருத்துவக் கருத்து உள்ளது" என்று கிசானா பதானாச்சாரோன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    "விசாரணையாளர்கள் சட்டத்தின் காலக்கெடுவிற்குள் வழக்குரைஞர்களிடம் பிரேத பரிசோதனை முடிவை சுருக்கமாகக் கூறுவார்கள்." என்றார் அவர்.

    முன்னதாக, வார்னேவுக்கு ஆஸ்துமா மற்றும் சில இதயப் பிரச்சனைகள் இருந்ததாக அவரது குடும்பத்தினரின் தகவலை மேற்கோள் காட்டி தாய்லாந்து போலீசார் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

    அவரது மேலாளரும் வார்னிடம் இருக்கும் விசித்திரமான உணவு டயட் பழக்க முறைகளால் கடந்த சில தினங்களாக நெஞ்சு வலி என்றும் வியர்வை கொட்டுகிறது என்றும் கூறியதாக தெரிவித்தார்.

    Also Read: ஷேன் வார்னின் 'அபத்தமான' டயட் மரணத்துக்குக் காரணமா?- மவுனம் கலைக்கும் மேலாளர்

    இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்சிஜி) வார்னின் குடும்ப இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 2006 ம் ஆண்டு பாக்சிங் டே டெஸ்ட் தினத்தில் வார்ன் தனது 700வது விக்கெட்டை வீழ்த்திய MCGயில் உள்ள கிரேட் சதர்ன் ஸ்டாண்ட், S K Warne Stand.என மறுபெயரிடப்படவுள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Shane Warne

    அடுத்த செய்தி