Home /News /sports /

இந்த பாகிஸ்தான் கேப்டன் எனக்கு ரூ.1.5 கோடி லஞ்சம் கொடுக்கப் பார்த்தார்- ஷேன் வார்ன் ‘பகீர்’ தகவல்

இந்த பாகிஸ்தான் கேப்டன் எனக்கு ரூ.1.5 கோடி லஞ்சம் கொடுக்கப் பார்த்தார்- ஷேன் வார்ன் ‘பகீர்’ தகவல்

முன்னாள் பாக். கேப்டன் மீது ஷேன் வார்ன் சூதாட்டக் குற்றச்சாட்டு

முன்னாள் பாக். கேப்டன் மீது ஷேன் வார்ன் சூதாட்டக் குற்றச்சாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் தான் மோசமாக ஆட வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் சலீம் மாலிக் தனக்கு ரூ 1.5 கோடி லஞ்சம் கொடுக்கப் பார்த்தார் என்று ஆஸ்திரேலிய லெஜண்ட் ஷேன் வார்ன் புதியகுண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டுள்ளார்.

மேலும் படிக்கவும் ...

    பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சம்பளத்தில் சமத்துவம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே, அதனால் புதிதாக ஏழ்மைப் பின்னணியிலிருந்து வரும் வீரர்கள் சூதாட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகி விடுவர். ஆனால் இதற்கெல்லாம் துவக்கப்புள்ளி ஒன்று உண்டு என்றால் அது முன்னாள்பாகிஸ்தான் கேப்டன் சலீம் மாலிக்தான்.

    1994ம் ஆண்டு கராச்சி டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் முடிவில் இந்த சம்பவம் நடந்ததாக ஷேன் வார்ன் இப்போது பகீர் தகவல் வெளியிட்டுள்ளார். அதாவது சலீம் மாலிக், ஷேன் வார்னுக்கு மோசமாக பந்து வீசச்சொல்லி 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக கூறுகிறார்.

    அமேசான் பிரைம் வீடியோவில் வரவிருக்கும் ‘ஷேன்’ என்ற டாக்குமெண்டரியில் ஷேன் வார்ன் கூறிய போது, சலீம் மாலிக்குக்கும் தனக்கு நடந்த உரையாடலைக் குறிப்பிட்டுள்ளார்.

    அதில் சலீம் மாலிக் தன்னைப் பார்க்க வேண்டும் என்று கூறியதாகவும், தான் பார்த்த போது , நான் நாங்கள் வெற்றி பெறும் நிலையில் இருக்கிறோம் என்றேன். அதற்கு சலீம் மாலிக், ‘நாங்கள் தோற்க முடியாது, பாகிஸ்தானில் தோற்றோம் என்றால் எங்கள் வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்படும். எங்கள் குடும்பத்தினர் அவதூறு செய்யப்படுவர், அவர்கள் வீடுகளும் எரிக்கப்படும். என்றார், எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை, உன் வேலையைப் பாரு மவனே எப்படியிருந்தாலும் நாங்கதான் ஜெயிக்கப் போறோம்னு சொன்னேன்.

    அப்போது சலீம் மாலிக் அணியின் சக வீரட் டிம் மேவுக்கு வைடாக வீசவும், விக்கெட் எடுக்க முயற்சி செய்யவில்லை என்றால் 2,76,000 டாலர்கள் தருவதாகவும் ஆசைக்காட்டினார். இன்று நாம் மேட்ச் பிக்சிங் பற்றி பெரிதாகப் பேசுகிறோம், அப்போது எனக்கு இதை பற்றி மிகவும் ஆச்சரியமாக இருந்தது. எனக்கு சலீம் மாலிக் லஞ்சம் கொடுக்க முனைந்த போது ‘என்ன எழவுடா இது?’ என்றுதான் தோன்றியது” என்றார் வார்ன்.

    சலீம் மாலிக் பிற்பாடு 2000-ம் ஆண்டில் கிரிக்கெட் சூதாட்டத்தினால் ஆயுள் தடை விதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Cricket, Shane Warne

    அடுத்த செய்தி