தோனியின் ஓய்வு குறித்து வெளிப்படையாக பேசிய ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே!

இந்திய அணிக்காக மகேந்திர சிங் பல பெருமைகளை தேடி தந்துள்ளார். தோனி இல்லாத இந்திய அணியை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

தோனியின் ஓய்வு குறித்து வெளிப்படையாக பேசிய ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே!
ஷேன் வார்னே - தோனி
  • News18
  • Last Updated: May 28, 2019, 7:46 PM IST
  • Share this:
தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்று யாரும் விமர்சிக்கத் தேவையில்லை என்று ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களில் மகேந்திரசிங் தோனி முக்கிய இடத்தில் உள்ளார். தோனி தலைமையிலான இந்திய அணி 3 விதமான உலகக் கோப்பைகளை வென்றுள்ளது. இவை அனைத்திலும் தோனியின் தலைமை முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

போட்டியின் இக்கட்டான சூழ்நிலைகளில் சிறந்த ஆலோசனைகளைத் தருவதிலும், நுட்பமான முடிவுகளை எடுப்பதிலும் தோனி கைதேர்ந்தவர். இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வந்த கேப்டன் தோனி 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதனை தொடர்ந்து டி20, ஒரு நாள் போட்டிகளில் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். தற்போது விக்கெட் கீப்பராக தோனி செயல்பட்டு வருகிறார்.
உலகக் கோப்பைத் தொடருக்கு பின் தோனி ஓய்வு அறிவிப்பார் என்று பலவிதமான விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது. இது குறித்து ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வாட்சன் கருத்து தெரிவிக்கையில், இந்திய அணிக்கு கிடைத்த அற்புதமான வீரர் தோனி. இந்திய அணிக்காக மகேந்திர சிங் பல பெருமைகளைத் தேடி தந்துள்ளார். தோனி இல்லாத இந்திய அணியை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் தோனி இடம் பெற்றிருப்பது குறித்து சிலர் கேள்வி எழுப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு, தோனி 9 ஆட்டங்களில் 327 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்டசமாக ஆட்டமிழக்கமால் 87 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது நடைபெற்ற ஐ.பி.எல் தோடரில் 15 போட்டிகளில் 12-ல் விளையாடிய தோனி 416 ரன்கள் எடுத்து அசத்தி உள்ளார்.
பயிற்சியின் போது கோலி - தோனி


இந்திய அணியின் கேப்டனாக உள்ள கோலிக்கு தோனி சிறந்த ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். எனவே தோனி ஓய்வு குறித்து யாரும் விமர்சிக்க வேண்டாம். ஓய்வு குறித்து சரியான நேரத்தில் முடிவு தோனி முடிவெடுப்பார் என்று வார்னே தெரிவித்துள்ளார்.

Also Read : பந்துவீச்சு ரகசியத்தை ஆஸ்திரேலிய வீரருடன் பகிர்ந்த மலிங்கா! வைரலாகும் வீடியோ

Also Read : கேப்டன்களுக்கெல்லாம் கேப்டன் தோனி - சுரேஷ் ரெய்னா

Also Read :இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்களுக்கு இப்படி ஒரு சலுகையா?

Also Read :இங்கிலாந்து புறப்படுகிறார் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின்!

Also Watch

First published: May 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading