கோலிக்கு எப்படி பவுலிங் போட வேண்டும்? ஆஸி. பவுலர்களுக்கு வார்னே அட்வைஸ்!

விராட் கோலி மற்றும் ஷேன் வார்னே.

#ShaneWarne explains how to bowl against #ViratKohli | ராஞ்சியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் விராட் கோலி தனது 41-வது சதத்தை பதிவு செய்தார். #INDvAUS

 • News18
 • Last Updated :
 • Share this:
  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு எப்படி பந்து வீச வேண்டும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே அறிவுரை கூறியுள்ளார்.

  சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சிறந்த ரன் குவிக்கும் வீரராக வலம் வருகிறார். அடுத்தடுத்து புதிய சாதனைகளையும் படைத்து வருகிறார்.

  ராஞ்சியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் விராட் கோலி தனது 41-வது சதத்தை பதிவு செய்தார். அதிக சதங்கள் அடித்தவர்கள் வரிசையில் 49 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார்.

  Virat Kohli, விராட் கோலி
  41-வது சதம் அடித்த விராட் கோலி. (BCCI)


  அத்துடன், குறைந்த இன்னிங்சில் கேப்டனாக 4000 ஆயிரம் ரன்களைக் கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார்.

  இந்நிலையில், ‘ரன் மெஷின்’ கோலிக்கு எப்படி பந்து வீச வேண்டும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே அறிவுரை கூறியுள்ளார்.

  “கோலிக்கு ஸ்டம்புக்கு நேராக பந்து வீசினால் அவர் அடித்து விடுவார். அதனால், ஒன்று ஆப் சைடு வையிடுக்கு அருகே போட வேண்டும், இல்லை என்றால் லெக் சைடு ஸ்டம்புக்கு நேராக போட வேண்டும். எந்த பக்கம் போடுகிறீர்களோ அந்தப் பக்கம் தேவையான அளவிற்கு பீல்டிங் நிறத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே கோலியின் ரன் வேட்டையைக் கட்டுப்படுத்த முடியும்” என்று வார்னே தெரிவித்துள்ளார்.

  Also Watch...

  Published by:Murugesan L
  First published: