Home /News /sports /

விவசாய நிலத்தில் ரன்னிங் ட்ராக் அமைத்து பயிற்சி - முகமது ஷமி உயிர்த்தெழுந்தது இப்படித்தான்..

விவசாய நிலத்தில் ரன்னிங் ட்ராக் அமைத்து பயிற்சி - முகமது ஷமி உயிர்த்தெழுந்தது இப்படித்தான்..

Muhammad shami

Muhammad shami

ஃபிட்னெஸ் காரணமாக அணியில் கிடைக்காததை சீரியசாக எடுத்துக் கொண்டு ஷமி உழைக்கத் தொடங்கினார்.

    வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தோல்விப்பாதையில் இருந்து கடின உழைப்பின் மூலம் மீண்டெழுந்து வந்து இந்திய அணியில் நிலையான இடத்தை மீண்டும் பிடித்தது எப்படி என்பது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கர் விவரித்துள்ளார்.

    இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழும் முகமது ஷமி, 2013ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடர் மூலம் இந்திய அணியில் அறிமுகமானார். அறிமுக போட்டியிலேயே 4 ஓவர்கள் மெய்டனாக வீசி பிரமாதப்படுத்தினார். அதே ஆண்டு மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகினார். இதுவரை அறிமுக இந்திய வீரரின் சிறந்த செயல்பாடு ஷமியுடையது தான்.

    மளமளவென விக்கெட்கள் வீழ்த்தி இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்த ஷமி, 2016 - 18 காலகட்டத்தில் ஃபிட்னஸ் இழப்பு, தனிப்பட்ட பிரச்னைகளால் இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பை இழந்தார். உச்சபட்சமாக 2018ல் இந்திய வீரர்களின் காண்ட்ராக்டில் இருந்தே ஷமி விடுபட்டிருந்தார்.

    Also read:  தாயிடம் தகராறு செய்த உறவினரை படுகொலை செய்த 10, 11ம் வகுப்பு சிறுமிகள்

    இருப்பினும் தோல்விப்பாதையில் இருந்து மீண்டு, தற்போது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் ஷமி, கடந்த ஞாயிறன்று செஞ்சூரியனில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனது 200வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இந்தியாவுக்காக 200 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்திய 5வது வேகப்பந்து பந்துவீச்சாளர் என்ற பெருமையை தற்போது ஷமி பெற்றிருக்கிறார்.

    இந்நிலையில், முகமது ஷமி குறித்து இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். Byjus's Cricket Live Show நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது சஞ்சய் பாங்கர் தெரிவித்ததாவது, “2016 அல்லது 2017 காலகட்டத்தில் ஷமியின் ஃபிட்னஸ் அளவு குறைந்தது.

    Also read:  இந்த வங்கியில் 10,000க்கு மேல் வரவு வைத்தாலே இனி கட்டணம் வசூல் - 2022 ஜனவரி 1 முதல் புதிய விதி அமல்!

    அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் கடினமான காலகட்டத்தையும் அவர் கடந்து சென்று கொண்டிருந்தார். ஆனால் ஃபிட்னெஸ் காரணமாக அணியில் இடம் கிடைக்காததை சீரியசாக எடுத்துக் கொண்டு அவர் உழைக்கத் தொடங்கினார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் அவருக்கு விவசாய நிலம் இருந்தது, அங்கு ரன்னிங் ட்ராக் அமைத்து, அதில் தினமும் காலநேரம் பார்க்காமல் ஓட்டப் பயிற்சி மேற்கொண்டு இழந்த ஃபிட்னஸை மீட்டெடுத்து அணிக்கு பழைய வலுவுடன் திரும்பினார்.” இவ்வாறு சஞ்சய் பாங்கர் தெரிவித்தார்.
    Published by:Arun
    First published:

    Tags: Cricket

    அடுத்த செய்தி