Home /News /sports /

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம்!

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம்!

INDvBAN

INDvBAN

ICC Test Ranking | Virat Kohli | Team India

    வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி வீரர்கள் ஐசிசி தரவரிசையில் முன்னேறி உள்ளனர்.

    இந்தூரில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் டெஸ்ட் போட்டி 3 நாட்களில் முடிவுக்கு வந்தது.

    இந்த டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்துவீசிய ஷமி, பேட்டிங்கில் அசத்திய மயங்க் அகர்வால் டெஸ்ட் தரவரிசையில் முன்னேறி உள்ளனர். ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் டாப் 10-ல் எந்த மாற்றமுமில்லை. ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் 937 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

    இந்தூர் டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி டக் அவுட்டாகியதால் 14 புள்ளிகளை பறிகொடுத்து 912 புள்ளிகளுடன்தொடர்ந்து  2வது இடத்தில் உள்ளார். வங்கதேச அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்த மயங்க் அகர்வால் 7 இடங்கள் முன்னேறி 11வது இடத்தை பிடித்துள்ளார். கொல்கத்தா டெஸ்ட் போட்டியிலும் மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடினால் டாப் 10-க்குள் நுழைவார்.

    பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் டெஸ்டில் 7 விக்கெட்களை சாய்த்த முகமது ஷமி 8 இடங்கள் முன்னேறி 790 புள்ளிகளுடன் 7வது இடத்திற்கு வந்துள்ளார். டாப் 10-ல் பும்ரா 4வது இடத்திலும், அஸ்வின் 10வது இடத்திலும் உள்ளனர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: BCCI, Indian cricket team

    அடுத்த செய்தி