Home /News /sports /

உங்கள் பவுலிங்கை சச்சின் புரட்டி எடுத்தது போதாதா?- கிண்டல் செய்ய தகுதி வேண்டும்- இங்கிலாந்தின் பாமி ஆர்மி மீது ரசிகர்கள் காட்டம்

உங்கள் பவுலிங்கை சச்சின் புரட்டி எடுத்தது போதாதா?- கிண்டல் செய்ய தகுதி வேண்டும்- இங்கிலாந்தின் பாமி ஆர்மி மீது ரசிகர்கள் காட்டம்

சச்சின்

சச்சின்

சர்வதேச அளவில் 100 சதங்கள் அடித்த ஒரே கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர் மட்டுமே. இத்தகைய பெருமைக்குரியவரை வாழ்த்துகிறோம் என்ற பெயரில் அவமதிப்பு செய்த இங்கிலாந்து ரசிகர்கள் பட்டாளமான பாமி ஆர்மிக்கு இந்திய நெட்டிசன்கள் சரியான பாடம் புகட்டினர்.

மேலும் படிக்கவும் ...
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 49வது பிறந்தநாளை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 24) கொண்டாடினார். பேட்டிங் லெஜண்ட் 24 ஆண்டுகளாக இந்தியாவை மிக உயர்ந்த மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தினார் மற்றும் விளையாட்டின் டெஸ்ட் மற்றும் ODI வடிவங்களில் அதிக ரன்கள் எடுத்தவராக தனது வாழ்க்கையை முடித்தார். சர்வதேச அளவில் 100 சதங்கள் அடித்த ஒரே கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர் மட்டுமே. இத்தகைய பெருமைக்குரியவரை வாழ்த்துகிறோம் என்ற பெயரில் அவமதிப்பு செய்த இங்கிலாந்து ரசிகர்கள் பட்டாளமான பாமி ஆர்மிக்கு இந்திய நெட்டிசன்கள் சரியான பாடம் புகட்டினர்.

    இங்கிலாந்துக்கு எதிராக 32 டெஸ்ட் மேட்ச்களில் 7 சதங்கள், 13 அரைசதங்கள் அதிகபட்ச ஸ்கோர் 193 புரட்டி எடுத்த இன்னிங்ஸ் அது. சராசரி 51 என்று இங்கிலாந்தை கேட்டுக் கேட்டு வெளூத்து வாங்கியுள்ளார், ஒருநாள் போட்டிகளில் கேட்கவே வேண்டாம் வச்சு செஞ்சிருக்காரு இங்கிலாந்தை. ஆனால் பாமி ஆர்மிக்கு இதெல்லாம் தெரியுமா என்ன?

    பேட்டிங் லெஜண்ட் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் ஞாயிற்றுக்கிழமை தனது 49 வது பிறந்தநாளைக் கொண்டாடும் போது, ​​​​உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் கிரிக்கெட் சகோதரத்துவம் மற்றும் ரசிகர்கள் மாஸ்டர் பிளாஸ்டருக்கு அவரது சிறப்பு நாளில் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இருப்பினும், ஒரு ட்விட்டர் பதிவு ரசிகர்களை கோபப்படுத்தியது, அது இங்கிலாந்தின் பார்மி ஆர்மியின் குசும்புத்தனமான ட்வீட்.

    ட்விட்டரில், பார்மி ஆர்மி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் படத்தை வெளியிட்டது, அதில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் கிரேட் சச்சின் அவுட் ஆகிச் செல்லும் போது இங்கிலாந்து வீரர்கள் கொண்டாடியதை "பிறந்தநாள் வாழ்த்துக்கள் லிட்டில் மாஸ்டர்" என்று தலைப்பிட்டு படத்துடன் வெளியிட்டனர்.



    இது ட்விட்டர் ரசிகர்களுக்கு பெரிய ஆத்திரத்தைக் கிளப்ப பாமி ஆர்மியை திட்டித்தீர்த்தனர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Sachin tendulkar

    அடுத்த செய்தி