ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

மண்ட பத்திரம்... வங்கதேச வீரரை எச்சரித்த உம்ரான் மாலிக் - வைரல் வீடியோ

மண்ட பத்திரம்... வங்கதேச வீரரை எச்சரித்த உம்ரான் மாலிக் - வைரல் வீடியோ

Ind vs Ban

Ind vs Ban

Ind vs Ban | வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் உம்ரான் மாலிக்கின் புயல்வேக பந்துவீச்சு ஷகிப் அல் ஹசனின் ஹெல்மெட்டை பதம் பார்த்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கசேதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி 2-வது ஒரு நாள் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது.

வங்கதேசம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும் மெஹதி மற்றும் மஹ்முதுல்லாஹ் சிறப்பாக விளையாடி அணியின் ரன்விகிதத்தை உயர்த்தினர். மஹ்முதுல்லாஹ் 77 ரன்கள் எடுத்து உம்ரான் மாலிக் பந்துவீச்சில் அவுட்டானார். ஹெதி 100 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் இருந்தார்.

Also Read : டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுக்கப்பட்ட ஓவர்… வைரலாகும் பும்ரா வீடியோ

இதனிடையே இந்த போட்டியின் போது ஷகிப் அல் ஹசன் பேட்டிங்கின் போது உம்ரான் மாலிக் வீசிய பந்து அவரது ஹெல்மெட்டை பதம் பார்த்தது. 11-வது ஓவரை உம்ரான் மாலிக் வீசினார். அது அவருக்கு முதல் ஓவராகும். ஆக்ரேஷமாக பந்துவீசிய உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஷகிப் அல் ஹசன் திணறி கொண்டிருந்தார். அப்போது கடைசி பந்து அதிவேகமாக வந்து ஷகிப் அல் ஹசனின் ஹெல்மெட்டில் பட்டு தெறித்தது.

இதனால் சற்று ஆட்டம் கண்ட ஷகிப் ஹெல்மெட்டை கழற்றி சரிசெய்து கொண்டார். இதனால் கொஞ்சம் நேரம் போட்டியில் சலசலப்பாக மாறியது. வடிவேலு பாணியில் மண்டபத்திரம் என்பது போல் உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சு இருந்தது. இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் 2 விக்கெட்களை வீழ்த்தினார் என்பது குறிப்பிடதக்கது.

First published:

Tags: Bangladesh, Ind vs Ban