Shakib Al Hasan: ஸ்டம்பை தூக்கி அடித்து ரகளையில் ஈடுபட்ட ஷகிப் அல் ஹசனுக்கு இது தான் தண்டனையா?

ரகளையில் ஈடுபட்ட ஷகிப் அல் ஹசன்

தெருவோரமாக கிரிக்கெட் விளையாடுபவர்கள் கூட இந்த அளவு அநாகரிகமாக சண்டை போட்டிருக்க மாட்டார்கள் என சமூக வலைத்தளங்களில் ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்தன.

  • Share this:
டாக்கா பிரீமியர் கிரிக்கெட் போட்டியில் ஸ்டம்பை பிடுங்கி எறிந்து, அம்பயருடன் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதற்காக வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தண்டனை அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடர் பாணியில் வங்கதேசத்திலும் டாக்கா பிரீமியர் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதில் கடந்த வெள்ளிக்கிழமை அபஹானி மற்றும் மொஹம்மதன் அணிகளுக்கிடையிலான லீக் போட்டி தானாவில் அரங்கேறியது. இப்போட்டியில் அபஹானி அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, அந்த அணியின் முஷ்பிகுர் ரஹ்மானுக்கு களநடுவர் எல்.பி கொடுக்க மறுத்திருக்கிறார். இதனால் கோபமடைந்த மொஹம்மதன் அணியின் கேப்டன் ஹகிப் அல் ஹசன் ஸ்டம்புகளை எட்டி உதைத்தோடு மட்டுமல்லாமல், ஸ்டம்புகளை தூக்கி அடித்து நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் தொடர்ச்சியாக எதிரணி கோச்சான கலீல் மஹ்மூத்திடமும் வாக்குவாதத்தில் அவர் ஈடுபட்டார்.

ஷிகிப் அல் ஹசனின் இந்த செயல் உலக கிரிக்கெட் ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியது. ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள் மற்றும் பிற அணி நிர்வாகிகளிடையேயும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஷகிப் அல் ஹசனின் இந்த செல் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்புக்கு உகந்த ஒரு நடத்தை இல்லை, தெருவோரமாக கிரிக்கெட் விளையாடுபவர்கள் கூட இந்த அளவு அநாகரிகமாக சண்டை போட்டிருக்க மாட்டார்கள் என சமூக வலைத்தளங்களில் அவருக்கு கண்டனக் குரல்கள் எழுந்தன.



தன்னுடைய தவறுக்காக ஃபேஸ்புக்கில் பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருந்தார் ஷகிப் அல் ஹசன். இருப்பினும் இது கிரிக்கெட் விதிகளுக்கு முரணான செயல் என்பதால் அவர் மீது ஒழுங்கீன நடவடிக்கையை வங்கதேச கிரிக்கெட் வாரியம் எடுத்திருக்கிறது.

Also Read:   அரிய மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மகளின் சிகிச்சைக்காக நிதி திரட்டும் தந்தை!

டாக்கா பிரிமியர் லீக்கில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஷகிப் அல் ஹசனுக்கு டாக்கா பிரிமியர் லீக்கில் 3 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் வாரியம். இது தவிர 5 லட்சம் Taka (5800 அமெரிக்க டாலர்கள்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஷகிப் அல் ஹசனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தண்டனை மிகவும் சிறியது எனவும் அவருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் எனவும் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே டாக்கா கிரிக்கெட் லீக் போட்டியின் போது நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக வங்கதேச கிரிக்கெட் வாரியம் கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது.

Also Read:   வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்ட ஜாக் மா: ஓராண்டில் சொத்து மதிப்பு பாதியாக சரியக் காரணம் என்ன?

முன்னதாக ஐபிஎல் போட்டியின் போது சூதாட்ட தரகர் ஒருவர் ஷகிப் அல் ஹசனை நாடியது குறித்து அவர் ஐசிசியின் கவனத்துக்கு கொண்டு வரவில்லை என்பதற்காக அவருக்கு ஒரு ஆண்டு விளையாட விதிக்கப்பட்டிருந்த தடை சமீபத்தில் தான் முடிவுக்கு வந்து அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: