ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

''இந்தியாவை வெற்றி பெற்றால் வருத்தப்படுவோம்'' - சென்டிமென்டாக பேசிய வங்கதேச அணி கேப்டன்!

''இந்தியாவை வெற்றி பெற்றால் வருத்தப்படுவோம்'' - சென்டிமென்டாக பேசிய வங்கதேச அணி கேப்டன்!

ஷாகிப் அல் ஹாசன்

ஷாகிப் அல் ஹாசன்

இந்தியா எங்கே விளையாடினாலும், ரசிகர்கள் அவர்களுக்கு சிறப்பான ஆதரவு கொடுக்கிறார்கள் என ஷாகிப் அல் ஹாசன் பேச்சு

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்தியாவுக்கு எதிராக நாங்கள் வெற்றி பெற்றால், அது வருத்தமாக இருக்கும் என வங்கதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

  ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8வது டி20 உலககோப்பை தொடரில் சூப்பர்-12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா இடம் பிடித்துள்ள குரூப் 2-ல் இந்தியாவை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியதன் மூலமாக வங்காள தேசம், பாகிஸ்தான் அணிகளுக்கான அரையிறுதி வாய்ப்பு கேள்வி குறியாகியுள்ளது.

  இந்தியாவும் அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற கட்டாயத்தில் உள்ளது. நாளை வங்கதேசத்துடன் மோதும் போட்டி மிக முக்கியமானது. இந்தியா ஒன்றில் தோல்வியடைந்து மற்றொன்றில் வெற்றி பெற்றால் கூட மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

  இந்த நிலையில், இந்தியாவை வீழ்த்தினால் அது எங்களக்கு வருத்தமாகத்தான் இருக்கும் என வங்காளதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் அளித்துள்ள போட்டியில் உலகக்கோப்பையில் எங்களுடைய வீரர்களில் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலைப்படவில்லை. போட்டியில் அனைத்து துறையிலும் ஒரு அணியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கவனம் செலுத்துவோம் என்றார்.

  இதையும் படிங்க:  அடுத்த போட்டியில் தினேஷ் கார்த்திக் விளையாடுவாரா? பயிற்சியாளர் டிராவிட் வைத்த சஸ்பென்ஸ்!

  இந்தியா அல்லது பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் வெற்றி பெறும் வாய்ப்பு கிடைத்தால், அது வருத்தமான விஷயமாகத்தான் இருக்கும். இந்தியா, பாகிஸ்தான் அணிகள் எங்களுடன் சிறந்த அணி. இந்தியாவுக்கு எதிரான நாளைய போட்டியை காண மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிறைந்து இருப்பார்கள் என நினைக்கிறேன். ஏனென்றால், இந்தியா எங்கே விளையாடினாலும், ரசிகர்கள் அவர்களுக்கு சிறப்பான ஆதரவு கொடுக்கிறார்கள் என கூறினார்.

  தொடர்ந்து பேசிய நாங்கள் உலகக் கோப்பையை வெல்வதற்காக இங்கே வரவில்லை. இந்தியாவுக்கு எதிராக நாங்கள் வெற்றி பெற்றால், அது வருத்தமாக இருக்கும். இந்திய அணிக்காக சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு சாதனையின்படி அனேகமாக, அவர் நம்பர்-1 வீரராக இருப்பார் என நினைக்கிறேன் என ஷாகிப் அல் ஹசன் கூறினார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: India vs Bangladesh, Shakib al hasan, T20 World Cup