Home » News » Sports » CRICKET SHAHID AFRIDI REVEALS HIS REAL AGE BUT THERE IS STILL A PROBLEM MU

வயதை மறைத்து விளையாடினாரா அப்ரிடி..? சுயசரிதை புத்தகத்தால் புதிய சிக்கல்!

#ShahidAfridi Reveals His Real Age But There Is Still A Problem | பாகிஸ்தான் அணிக்காக 41 வயதை 36 எனக் கூறி மேலும் 5 ஆண்டுகள் விளையாடியுள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. #GameChanger

வயதை மறைத்து விளையாடினாரா அப்ரிடி..? சுயசரிதை புத்தகத்தால் புதிய சிக்கல்!
ஷகித் அப்ரிடி.
  • News18
  • Last Updated: May 3, 2019, 1:20 PM IST
  • Share this:
பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஷகித் அப்ரிடி, தனது வயதை மறைத்து சர்வதேச போட்டிகளில் விளையாடியதாக சந்தேகம் எழுந்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் ஷகித் அப்ரிடி. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிரடி வீரராக வலம் வந்த அப்ரிடி, போட்டியின் தன்மையை எப்போது வேண்டுமானாலும் மாற்றக்கூடிய வீரராக இருந்தார்.

1996-ம் ஆண்டு கென்யா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுகமான அப்ரிடி, அதே ஆண்டில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 37 பந்தில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்தார்.


Shahid Afridi, ஷகித் அப்ரிடி
ஷகித் அப்ரிடி.


அவர் பாகிஸ்தான் அணிக்காக 27 டெஸ்ட், 398 ஒருநாள், 99 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2009 முதல் 2011 வரை கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அப்ரிடி ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 25-ம் தேதி ‘கேம் சேஞ்சர்’ என்ற தனது சுயசரிதை புத்தகத்தை அப்ரிடி வெளியிட்டார். அதில், சான்றிதழில் உள்ளது போல், தான் 1980-ல் பிறக்கவில்லை என்றும், தான் பிறந்த உண்மையான ஆண்டு 1975 என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Game Changer Shahid Afridi
ஷகித் அப்ரிடி சுயசரிதை புத்தகம்.


அதன்படி பார்த்தால் அப்ரிடி அதிவேகசதம் அடித்த போது அவருக்கு உண்மையில் 21 வயது இருந்திருக்கும். ஆனால், அதே சுயசரிதையில் தான் அதிவேக சதம் அடித்தபோது 19 வயது என குறிப்பிட்டு மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அத்துடன், பாகிஸ்தான் அணிக்காக 41 வயதை 36 எனக் கூறி மேலும் 5 ஆண்டுகள் விளையாடியுள்ளாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஐ.பி.எல் தொடரில் இருந்து தோனி ஓய்வா? ரெய்னா சூசகப் பேச்சால் பரபரப்பு!

சொன்னதை செய்து காட்டிய டேவிட் வார்னர்!

உலகத்திலேயே தோனி தான் சிறந்த கேப்டன் - பிராவோ

சூப்பர் ஓவர் பரபரப்பு! ஹைதராபாத்தை வீழ்த்தி ப்ளேஆஃப்க்குள் நுழைந்தது மும்பை அணி

Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: May 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading