ஷாகீத் அப்ரீடியின் சிறந்த அணியில் லாரா, கோலி, தோனிக்கு இடமில்லை- மற்ற வீரர்கள் யார்?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஷாகீத் அப்ரீடி தனக்குப் பிடித்த ஆல்டைம் கிரேட் அணியை தேர்ந்தெடுத்துள்ளார், இதில் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே இந்தியாவிலிருந்து இடம்பெற்றுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஷாகீத் அப்ரீடி தனக்குப் பிடித்த ஆல்டைம் கிரேட் அணியை தேர்ந்தெடுத்துள்ளார், இதில் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே இந்தியாவிலிருந்து இடம்பெற்றுள்ளார்.

 • Share this:
  சச்சின் டெண்டுல்கருடன் அவரது காலத்தில் ஆடிய இன்னொரு கிரேட், 400 ரன்கள் எடுத்து உலகச் சாதனை புரிந்த மே.இ.தீவுகளின் பிரையன் லாரா இல்லை, 800 விக்கெட்டுகள் வீழ்த்தி உலகச் சாதனை புரிந்த முத்தையா முரளிதரன் இல்லை.

  நடப்பு கிரிக்கெட்டில் சாம்பியனான விராட் கோலி இல்லை, இந்தியாவின் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே,தோனி, கங்குலி என்று யாரும் இவரது அணியில் இடம்பெறவில்லை.

  Also Read: Euro 2020 Germany vs Franceசாம்பியன்களின் பரபரப்பான ஆட்டம் : ஜெர்மனி தன் கோலுக்குள்ளேயே அடித்த ஓன் கோலால் பிரான்ஸ் 1-0 வெற்றி

  இவரது சிறந்த அணியில் 5 பாகிஸ்தான் வீரர்கள் உள்ளனர். இந்த அணியின் கேப்டன் இன்சமாம் உல் ஹக்காம். ரிக்கி பாண்டிங் அணியில் இருக்கிறார் அவர் கேப்டன் இல்லை, ஆடம் கில்கிறிஸ்ட் இருக்கிறார் அவர் கேப்டன் இல்லை ஷேன் வார்ன் இருக்கிறார் அவர் கேப்டன் இல்லை, ஆனால் இன்சமாம் உல் ஹக் கேப்டன்.

  இதையும் படிக்கலாமே: Ronaldo | Euro 2020 | தொடக்க சொதப்பலுக்குப் பிறகு ரொனால்டோ அபாரம், வரலாறு படைத்தார்! கடைசி 5 நிமிடங்களில் 3 கோல்கள் அடித்து ஹங்கேரியைக் கவிழ்த்த போர்ச்சுகல்

  இந்தியாவிலிருந்து சச்சின் டெண்டுல்கட் மட்டுமே இடம்பெற்றுள்ளார், அதில் அவருக்கு 4ம் நிலை அளித்துள்ளார். சயீத் அன்வர், ஆடம் கில்கிறிஸ்ட் தொடக்க வீரர்கள். ரிக்கி பாண்டிங் அவரது வழக்கமான ஒன் டவுனில் இருக்கிறார். சச்சின் அடுத்தது, இன்சமாம் உல் ஹக் அடுத்தது. ஜாக் காலிஸுக்கு 6ம் நிலை. பவுலிங்கில் வாசிம் அக்ரம், கிளென் மெக்ரா, ஷேன் வார்ன், ஷோயப் அக்தர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஷாகித் அப்ரீடியின் ஆல் டைம் லெவன் இதோ:

  சயீத் அன்வர், ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர், இன்சமாம் உல் ஹக், ஜாக் காலிஸ், ரஷீத் லடீப், வாசிம் அக்ரம், கிளென் மெக்ரா, ஷேன் வார்ன், ஷோயப் அக்தர்.
  Published by:Muthukumar
  First published: