ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் டிரா… பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழு தலைவராக அஃப்ரிடி நீடிக்க வாய்ப்பு…

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் டிரா… பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழு தலைவராக அஃப்ரிடி நீடிக்க வாய்ப்பு…

ஷாகித் அப்ரிதி

ஷாகித் அப்ரிதி

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றாவிட்டாலும் வலுவான அந்த அணிக்கு எதிரான 2 போட்டிகளையும் பாகிஸ்தான் டிரா செய்து கவனம் பெற்றது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிதி நீடிப்பார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.நியூசிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி டிரா செய்துள்ள நிலையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த நவம்பரில் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி அந்நாட்டிற்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.

இந்த 3 போட்டிகளிலும் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியது. உள்ளூரில் 3 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான விமர்சனங்கள் குவிந்தன. இதையடுத்து தேர்வுக்குழுவை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த சூழலில் முன்னாள் கேப்டன் அப்ரிதி தலைமையில் தேர்வுக்குழு நியமிக்கப்பட்டது. இதில் அப்துல் ரசாக், ராவ் இப்திகார், ஹாரூன் ரஷீத் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த புதிய தேர்வுக்குழு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களை தேர்வு செய்தது.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றாவிட்டாலும் வலுவான அந்த அணிக்கு எதிரான 2 போட்டிகளையும் பாகிஸ்தான் டிரா செய்து கவனம் பெற்றது. இந்த போட்டியில் விக்கெட் கீப்பர் ரிஸ்வானுக்கு பதிலாக சர்ப்ராஸ் இடம்பெற்றிருந்தார். 2 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய அவர் தொடர் நாயகன் விருதையும் பெற்றார்.

இந்நிலையில் அப்ரிதி தலைமையிலான தேர்வுக்குழு பொறுப்பில் நீடிக்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஸ்பான்சர்கள், போட்டி ஒளிபரப்பு குறித்து முக்கிய முடிவு… பிசிசிஐ அவசர கூட்டம் இன்று நடைபெறுகிறது…

தற்போது பாகிஸ்தான் – நியூசிலாந்து இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ளது.

இந்திய தொடருக்கான நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் முக்கிய வீரர் நீக்கம்…

ஜனவரி 14ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 3 போட்டிகள் நடத்தப்படும். இந்த தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றி விட்டால் அப்ரிதி தலைமையிலான தேர்வுக்குழு நீடிப்பதற்கு வாய்ப்புகள் பிரகாசம் அடையும் என்று கூறப்படுகிறது.

First published:

Tags: Cricket