Home /News /sports /

ஷாஹித் அப்ரிடிக்கு 5-வது பெண் குழந்தை..! - வைரல் புகைப்படம்

ஷாஹித் அப்ரிடிக்கு 5-வது பெண் குழந்தை..! - வைரல் புகைப்படம்

5 மகள்களுடன் ஷாஹித் அப்ரிடி

5 மகள்களுடன் ஷாஹித் அப்ரிடி

பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஷாஹித் அப்ரிடிக்கு 5-வது பெண் குழந்தை பிறந்துள்ளது.

பாகிஸ்தான் அணியில் 18 வயதில் களமிறங்கி அசத்தியவர் ஆல்-ரவுண்டரான ஷாஹித் அப்ரிடி. தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர். ஒரு நாள் போட்டியில் 37 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தவர்.

அதேபோன்று ஒரு நாள் போட்டியில் அதிக சிக்சர்கள் (351) அடித்த வீரர் என்ற பெருமைக்குரியவர் அப்ரிடி. கடந்த 2017-ம் ஆண்டு அனைத்துவிதமான சர்வதேச போட்டியிலும் இருந்து ஓய்வு பெற்றார். 39 வயதான அப்ரிடிக்கு ஏற்கனவே 4 பெண் குழந்தைகள் உள்ளன. தற்போது 5-வது பெண் குழந்தை பிறந்துள்ளது.



இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமான 5 மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை அப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. அவருக்கு பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Published by:Vijay R
First published:

Tags: Cricket

அடுத்த செய்தி