• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்திய பேட்ஸ்மேன்களை மைதானத்தில் கேலி செய்த பாக். பவுலர் - வைரல் வீடியோ

இந்திய பேட்ஸ்மேன்களை மைதானத்தில் கேலி செய்த பாக். பவுலர் - வைரல் வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சாஹீன் அஃப்ரிடி இந்திய பேட்ஸ்மேன்களை கேலி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

  • Share this:
    டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுகள் முடிவடைந்து தற்போது அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது. கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்த இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் அடைந்த தோல்வியால் தொடரை விட்டு வெளியேறியது.

    குறிப்பாக உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் இந்தியாவை முதன்முறையாக வீழ்த்தியது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சாஹீன் அஃப்ரிடி இந்திய அணி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலியை வீழ்த்தினார். அவரது பந்துவீச்சால் இந்திய அணி ரன்குவிக்க முடியாமல் திணறியது. இதனால் எளிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இதையடுத்து பாகிஸ்தான் சூப்பர் 12 சுற்றில் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று வலுவான நிலையில் அரையிறுதி போட்டியில் அடியெடுத்து வைத்தது. இதனிடையே ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது பாகிஸ்தான் பவுலர் சாஹீன் அஃப்ரிடி இந்திய பேட்ஸ்மேன்களை கேலி செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.



    அந்த வீடியோவில் பவுண்டரி எல்லையில் ஃப்ல்டிங் செய்து கொண்டிருந்த அஃப்ரிடி ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி அவுட்டானதை சைகையில் செய்து காட்டுவார். இதனை பார்த்த பாகிஸ்தான் வீரர்கள் ஆரவார கூச்சலிட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: