Home /News /sports /

துபாயில் அஃப்ரீடி, ஓவலில் ஆமிர் இவர்களை ஊதித்தள்ளினர்: இந்திய அணியை கிண்டல் செய்யும் நாசர் ஹுசைன்

துபாயில் அஃப்ரீடி, ஓவலில் ஆமிர் இவர்களை ஊதித்தள்ளினர்: இந்திய அணியை கிண்டல் செய்யும் நாசர் ஹுசைன்

இந்திய அணியை கிண்டல் செய்த நாசர் ஹுசைன்

இந்திய அணியை கிண்டல் செய்த நாசர் ஹுசைன்

இந்திய அணி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தில் தோற்றாலும் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் இங்கிலாந்தை ஊதித்தள்ளினர், அதுவும் 110க்கெல்லாம் ஆல் அவுட் ஆகி நோ-லாஸில் வென்றோம் ஆனாலும் இங்கிலாந்தின் நாசர் ஹுசைன் இந்திய அணியை கேலி செய்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    இந்திய அணி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தில் தோற்றாலும் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் இங்கிலாந்தை ஊதித்தள்ளினர், அதுவும் 110க்கெல்லாம் ஆல் அவுட் ஆகி நோ-லாஸில் வென்றோம் ஆனாலும் இங்கிலாந்தின் நாசர் ஹுசைன் இந்திய அணியை கேலி செய்துள்ளார்.

    டி20-யில் பிரமாதமாக 2-1 என்று வென்றது இந்திய அணி அதுவும் ஒரு போட்டியில் சூரியகுமார் யாதவ் ஏறக்குறைய வெற்றி பெறச் செய்திருப்பார், மறக்க முடியாத சதம் அது. ஒருநாள் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சை ஆடத்தெரியாமல் முதல் போட்டியில் 110 ரன்களுக்குச் சுருண்டு வெளிச்சத்தோடு ஆட்டம் முடிந்தது, 2வது போட்டியிலும் இங்கிலாந்து சரியாக ஆடவில்லை 246 ரன்களுக்கு மட்டுப்பட்டனர். ஆனால் இந்தியாவும் சொதப்பி 100 ரன்களில் தோல்வி கண்டது.

    ஆனால் 3வது போட்டியில் 350 ரன்கள் பிட்சில் மீண்டும் ஹர்திக் பாண்டியாவின் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு இரையாகி 260 ரன்களையே அடித்தது இங்கிலாந்து ஆனால் இந்திய அணி விரட்டும்போது 72/4 என்ற நிலையில் ஹர்திக் பாண்டியாவும், ரிஷப் பண்ட்டும் வெளுத்து வாங்கி விட்டனர், மேட்சை 50 பந்துகளுக்கும் மேல் மீதம் வைத்து இந்தியா வென்றது, தொடரையும் வென்றது, ஆனால் நாசர் ஹுசைனுக்குப் பாவம் இங்கிலாந்து தோற்றது தெரியவில்லை போலும் இந்திய அணியை கேலி செய்துள்ளார்:

    சோனி ஸ்போர்ட்ஸில் அவர் கூறியதாவது:

    இந்திய வீரர்கள் இடது கை வேகப்பந்து வீச்சை இன்னும் கொஞ்சம் நன்றாக ஆட வேண்டும். வரலாறு என்ன கூறுகிறது என்றால் ஷாஹின் அஃப்ரீடி துபாயில் ஒருநாள் மாலை இந்திய அணியை ஊதித்தள்ளினார். ஓவலில் ஒரு மதிய வேளையில் இந்திய அணியை ஊதினார் முகமது ஆமிர், இங்கு ரீசி டாப்லி என்ற இடது கை வீச்சாளர் இந்திய அணியை ஒரு கைப்பார்த்தார்.

    இந்திய வீரர்கள் தங்கள் பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் பதற்றமாக இருக்க வேண்டும், எனவே அவர்களின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஓரிருவர் T20 இல் கடைசி இரண்டு ஓவர்களில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த வேகப்பந்து விசிசாளர்கள் அவர்களை வெற்றி பெறச் செய்வார்கள்.

    இவ்வாறு கூறினார் நாசர் ஹுசைன்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India Vs England, India vs Pakistan, Shaheen Afridi, T20 World Cup

    அடுத்த செய்தி