• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கொல்கத்தா தோற்றதற்கு மன்னிப்பு கேட்ட ஷாருக்கான்

கொல்கத்தா தோற்றதற்கு மன்னிப்பு கேட்ட ஷாருக்கான்


ஷாருக்கான்

ஷாருக்கான்

ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஷாருக்கான் அதிருப்தியான ஆட்டம் என கூறியுள்ளார்.

  • Share this:
    மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி தோற்றதற்கு அதன் உரிமையாளர்களில் ஒருவரான நடிகர் ஷாருக்கான் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

    நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்  நேற்று நடந்தது.  இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை சேப்பாக்கம் ஸ்பின்னர்களுக்கு நன்கு வசதியாக இருக்கும் என்பதால் பவர் ப்ளே ஓவர்களில் ஸ்பின்னர்களை முதலில் களமிறக்கினார் கொல்கத்தா கேப்டன் இயான் மோர்கன். ஹர்பஜன் சிங், வருண் சக்கரவர்த்தி, ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் பந்துவீசினர். 6-வது ஓவரில் தான் வேகப்பந்துவீச்சாளரை மோர்கன் கொண்டு வந்தார்.

    6-வது ஓவரை பேட் கம்மின்ஸ் வீசினார். கே.கே.ஆர் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்தனர். இதனால் மும்பை பேட்ஸ்மேன்களால் பெரிய ஷாட்டுகளை ஆட முடியவில்லை. சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்த நிலையில் அவுட்டானார். அதன்பின்னர் வந்த பேட்ஸ்மேன்களை கே.கே.ஆர் பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர். 18 மற்றும் 20 -வது ஓவரை வீசிய ரஸல் 15 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 152 ரன்கள் எடுத்தது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்னிங்ஸை நித்திஷ் ராணா, சுப்மான் கில் தொடங்கினர். டிரெண்ட் போல்ட் முதல் ஓவரை வீசினார். முதல் பந்தை பவுண்டரியுடன் ராணா தொடங்கினார். இருவரும் நிதானமான ஆட்டத்தை தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 72 ரன்கள் எடுத்தது. அதிரடியை தொடங்கிய சிறிது நேரத்தில் ஷூப்மான் கில் 37 ரன்களில் விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

    இதனையடுத்து களமிறங்கிய திரிபாதி 5 ரன்கள் எடுத்த நிலையில் ராகுல் சாஹர் பந்துவீச்சில் அவுட்டானார். இதனையடுத்து கேப்டன் இயான் மோர்கன் களமிறங்கினார். தடுமாற்றத்துடன் ஆடிய மோர்கன் ராகுல் சாஹர் பந்துவீச்சில் கேட்சாகி வெளியேறினார். இதன்காரணமாக கே.கே.ஆர் அணிக்கு பிரஷர் ஏற்பட்டது. ஒருபக்கம் நித்திஷ் ராணா அதிரடி காட்ட மறுபக்கம் விக்கெட் விழுந்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து ஷாகிப் அல் ஹசன் களமிறங்கினார்.

    3-வது ஆப்ஷன் சுழற்பந்துவீச்சாளராக ரோஹித் ஷர்மா உருவெடுத்தார். 14-வது ஓவரை வீசிய ரோஹித் ஷர்மா 9 ரன்களை விட்டுக்கொடுத்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய நித்திஷ் ரானா , ராகுல் சாஹர் பந்தை இறங்கி வந்து அடிக்க முயன்று ஸ்டெம்பிங்கில் சிக்கினார். நித்திஷ் ரானா 57 ரன்களுடன் நடையை கட்டினார். இதற்கு அடுத்த ஓவரில் க்ருணால் பண்டியா பந்துவீச்சில் தூக்கியடிக்க முற்பட்டு ஷாகிப் அல் ஹசன் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

     

     



     

    தினேஷ் கார்த்திக் - ரஸல் இருவரும் களத்தில் இருந்ததால் கொல்கத்தா ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ரஸல் கொடுத்த கேட்ச் வாய்ப்பை க்ருணால் பாண்ட்யா வீணடித்தார். 18 பந்துகளுக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. 18 வது ஓவரில் க்ருணால் பாண்டியா அற்புதமாக பந்து வீசி நெருக்கடி கொடுத்தார். அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அடுத்த ஓவரை வீசிய பும்ரா 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. ட்ரெண்ட் பவுல்ட் இந்த ஓவரை வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ரஸல் அவுட், 4-வது பந்தில் பேட் கம்மின்ஸ் போல்டாக்கி மும்பை வெற்றியை உறுதிசெய்தார். மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஷாருக்கான் அதிருப்தியான ஆட்டம் என கூறியுள்ளார்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: