• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஐசிசி தரவரிசையில் இளம் வயதில் முதலிடத்தைப் பிடித்த இந்திய வீராங்கனை ஷஃபாலி வெர்மா!

ஐசிசி தரவரிசையில் இளம் வயதில் முதலிடத்தைப் பிடித்த இந்திய வீராங்கனை ஷஃபாலி வெர்மா!

ஷஃபாலி வெர்மா

ஷஃபாலி வெர்மா

சர்வதேச டி20 பேட்டிங் தரவரிசையில் 16வயதே ஆன இந்திய வீராங்கனை ஷஃபாலி வெர்மா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். 

  • Share this:
ஐசிசி மகளிர் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் இந்திய இளம் வீராங்கனை ஷஃபாலி வெர்மா முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார்.

ஆஸ்திரேலியாவில் மகளிருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், ஐசிசி  வீராங்கனைகளுக்கான டி20 தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் அபாரமாக விளையாடி வருபவர் இந்திய வீராங்கனை ஷஃபாலி வெர்மா. இதுவரை மொத்தம் 4 லீக் ஆட்டங்களில் ஆடியுள்ள ஷஃபாலி, 161 ரன்கள் எடுத்துள்ளார். இதையடுத்து ஐசிசி வெளியிட்டுள்ள பேட்டிங் டி20 தரவரிசையில் வெர்மா முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார்.

முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து வீராங்கனை சூசி பேட்டிஸ்-யை பின்னுக்கு தள்ளி ஷஃபாலி முதலிடத்தை பிடித்தார். குறைந்த வயதில் டி20 கிரிக்கெட் அரங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ள ஷஃபாலி, நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கிய வீராங்கனையாகவும் வலம் வருகிறார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான தொடரின் மூலம் அறிமுகமான ஷஃபாலி, 5 மாதங்களிலேயே ஐசிசி தரவரிசையில்  முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இதுவரை மொத்தம் 18 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷஃபாலி, 2 அரைசதம் உள்பட 485 ரன்களை குவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முதலிடத்தை பிடித்த 2-வது இந்திய வீராங்கனை என்ற பெயரையும் வெர்மா பெற்றுள்ளார். முன்னதாக, இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் முதலிடத்தில் இருந்திருந்தது குறிப்பிடதக்கது. இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்துடன் நாளை விளையாடுகிறது. இந்த ஆட்டத்தில் ஷஃபாலி வெர்மா அதிரடியாக ஆடி இந்தியாவின் வெற்றிக்கு வித்திடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: