மாஸ் காட்டிய சாம் கரன்... தோனி தாக்கம் என புகழாரம் சூட்டிய ஜாஸ் பட்லர்

மாஸ் காட்டிய சாம் கரன்... தோனி தாக்கம் என புகழாரம் சூட்டிய ஜாஸ் பட்லர்

சாம் கரன்

தோனியின் தாக்கம்தான் சாம் பேட்டிங்கில் தெரிந்ததுனு இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் புகழ்ந்து உள்ளார். ‘

 • Share this:
  ‘ஜெயிக்கிறோமோ இல்லையோ முதல்ல சண்டை செய்யனும்’ நேற்று களத்துக்கு வந்த சாம் கரன் மைண்ட்செட் அதுவாத்தான் இருந்தது. சுட்டிக்குழந்தையாக இருந்த சாம்கரன் நேத்து அசுரனாக மாறி அசால்ட் செய்தார். இங்கிலாந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் திரும்ப இந்திய ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலையில் இருந்தனர். மேட்ச் வின்னரும் நாங்கத்தான் டிராபியும் எங்களுக்குதான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். இங்கிலாந்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களே ஆஃப் ஆகிப்போக அதிரடியில் மிரட்டினார் சாம்கரன். மேட்ச் முடிஞ்சதுன்னு இருந்த இங்கிலாந்து அணியினருக்கே நம்பிக்கை கொடுத்தது சாம்கரனின் அட்டகாசமான இன்னிங்க்ஸ். மொயின் அலி, ரஷித், மார்க் வுட் மூனு டெய்லெண்டர்களை கொண்டு ஆக்சனில் இறங்கினார் சாம். அவருக்கு அதிர்ஷடமும் உறுதுணையாக இருந்தது. பிரசீத் கிருஷ்ணா ஓவரில் சாம் கரன் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஹர்திக் தவறவிட்டார்.

  கரன் ஆடியவிதம் இங்கிலாந்து அணியினருக்கு புதுதெம்பை அளித்தது. மொயின் அலி, ரஷித் ஆகியோர் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்தனர். இதற்கிடையில் சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது முதல் அரைசதத்தை பதிவுசெய்தார். மார்க் வுட்டை காலி செய்தால் வெற்றியை வசமாக்கலாம் என்றால் அதுவும் நடக்கவில்லை. அவர் சாம்கரணுக்கு ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்துக்கொடுத்தார். சாம் தொடர்ந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். கடைசி சில ஓவர்களில் கோலி எடுத்த சில அருமையான முடிவுகள் இந்தியாவுக்கு வெற்றியை தேடித்தந்தது. 47 ஓவரை வீசிய ஷர்துல் தாக்கரை டார்க்கெட் செய்த சாம் ஒரு சிக்ஸர் 2 பவுண்டரிகளை விளாசி அந்த ஓவரில் 18 ரன்களை திரட்டினார்.

  கோலி


  அனுபவ பந்துவீச்சாளர்கள்தான் நமக்கு கைக்கொடுப்பார்கள் என்று உணர்ந்த கோலி புவியை பந்து வீச அழைத்தார். சிக்கனத்துக்கு பெயர் போன நம்ம புவி அந்த ஓவரில் 2 வைட்களை வீசியும் மொத்தம் 4 ரன்களே விட்டுக்கொடுத்தார். மார்க் வுட்டுக்கு ஒரு எல்.பி.டபிள்யூ அப்பீல் செய்தார். பந்து ஸ்டெம்பை தாக்காததால் அவுட் வழங்கவில்லை. அடுத்த ஓவர் ஹர்திக் பாண்டியா இவர் 5 ரன்களை விட்டுக்கொடுத்தார். சாம் கரன் கொடுத்த கேட்ச் வாய்ப்பை நட்ராஜன் தவறவிட்டார். கடைசி ஓவர் நட்ராஜனுக்கு கொடுக்கப்பட்டது. அட்டாக்கிங் பெளலரான நட்ராஜின் முந்தைய ஓவர்களின் ஷாம் கரன் கொஞ்சம் தடுமாறி இருந்ததால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தார் கேப்டன் கோலி.  6 பந்து 14 ரன் டார்கெட். முதல் பந்திலே மார்க் உட் ரன் அவுட். கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி மட்டுமே சாம்கரணால் விளாச முடிந்தது. கச்சிதமான பந்து வீசிய நட்ராஜ் இந்தியாவுக்கு வெற்றியை தேடித்தந்தார். ’ஜெயிக்கிறோமோ இல்லையோ முதல்ல சண்டை செய்யனும்’ சண்டை செஞ்சாதான் வரலாறு படைக்க முடியும். 95 ரன்களை விளாசிய சாம் கரன் நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் இருந்தார். சாம் மிஸ் தி சென்சூரி பட் வின் த ஹார்ட்ஸ்-னு தான் சொல்லனும். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 8-வது வீரர் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன்கள் இதுதான்.

  சாம் கரன் ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் தோனியின் தாக்கம்தான் சாம் பேட்டிங்கில் தெரிந்ததுனு இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் புகழ்ந்து உள்ளார். ‘தோனி மாதிரியே சாம் கரனும் கடைசி வரை போராடுவது, மேட்ச் ஃபினிஷ் செய்ய முயல்வது, வெற்றி கிடைக்கிற வரை ஆட்டத்தை கொண்டு செல்வது என தோனியின் தாக்கத்தை பார்க்க முடிந்தது. இந்த சூழலில் சாம் ஆடியதை போலத்தான் தோனியும் ஆடியிருப்பார். இந்த இன்னிங்ஸ் குறித்து தோனியுடன் பேச சாம் கரன் விருப்பப்படுவார். சாம் கரனின் ஆட்டம் எங்களுக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்துள்ளது. அவருடைய உழைப்புக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் அவர்தான்  ஹீரோ’ என பட்லர் என புகாழாரம் சூட்டியுள்ளார். யெஸ்.. சாம் இஸ் மேட்ச் வின்னர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: