ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

சக நாட்டு வீரரின் மகளை திருமணம் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்!

சக நாட்டு வீரரின் மகளை திருமணம் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்!

ஷதாப் கான்

ஷதாப் கான்

பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் ஷதாப் கான் முன்னாள் வீரர் ஷகிலின் முஸ்தாகின் மகளை திருமணம் செய்து கொண்டதை சமூக வலைதளத்தில் உறுதி செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கிரிக்கெட் உலகில் இந்த மாதம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் போட்டிகளால் தலைப்பு செய்திகளில் இடம்பெறும் வீரர்கள் தற்போது திருமணம் செய்து கொண்டு தலைப்பு செய்திகளில் வந்து கொண்டுடிருக்கின்றனர். இந்திய நட்சத்திர ஜோடியான கே.எல்.ராகுல் மற்றும் அதியா ஷெட்டி நேற்று திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் மகாராஷ்ட்ரா மாநிலம் கண்டாலாவில் அதியா ஷெட்டியின் தந்தையும் நடிகருமான சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் அவர்களுக்கு எளிய முறையில் நடைபெற்றது. கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி ஜோடிக்கு பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷதாப் கான் தனது திருமணத்தை ட்விட்டரில் உறுதிப்படுத்தி உள்ளார். ஷதாப் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், "அனைவருக்கும் சலாம். , இன்று எனது திருமணம். நான் வழிகாட்டியான சாகி (சக்லைன் முஷ்டாக்) பாயின் குடும்பத்தில் ஒரு அங்கமாகி உள்ளேன். நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது, எனது குடும்ப வாழ்க்கையைத் தனியாக வைத்திருக்க விரும்பினேன், என் மனைவி அதையே கேட்டாள், அவளுடைய வாழ்க்கை அந்தரங்கமாக இருக்க வேண்டும் என்று அவள் விரும்புகிறாள், அவளுடைய விருப்பத்தையும் எங்கள் குடும்பத்தின் விருப்பத்தையும் மதிக்கும்படி அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்“ என்று பதிவிட்டுள்ளார்.

ஷதாப் கான் பாகிஸ்தான் அணியின் முக்கிய ஆல்ரவுண்டராக இருந்து வருகிறார். பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்தி வரும் ஷதாப் கான் தனது வாழ்க்கையில் புதிய இன்னிங்சை தொடங்கி உள்ளார். பாகிஸ்தான் அணியின் ஷான் மசூத் திருமணம் கடந்த 20-ம் தேதி நடைபெற்றது. இவர்கள் இருவரின் திருமணத்திற்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரவித்து வருகின்றனர்.

First published:

Tags: Cricket, Pakistan News in Tamil