அமெரிக்க ஓபன் டென்னிஸ் : புதிய மைல்கல்லை எட்டிய செரீனா வில்லியம்ஸ்!

அமெரிக்க ஓபன் ஒற்றையர் பிரிவில் 100 வெற்றிகளை பதிவு செய்துள்ளார் செரீனா.

Vijay R | news18-tamil
Updated: September 4, 2019, 7:20 PM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ் : புதிய மைல்கல்லை எட்டிய செரீனா வில்லியம்ஸ்!
செரீனா வில்லியம்ஸ்
Vijay R | news18-tamil
Updated: September 4, 2019, 7:20 PM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டியில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றதன் மூலம் மகளிர் ஒற்றையர் பிரிவில் 100-வது வெற்றியை பதிவு செய்து புதிய மைல்கல்லை அடைந்துள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் காலிறுதி போட்டியில் சீன வீராங்கனை வாங் கியாங் - செரீனா வில்லியம்ஸ் பலப்பரிட்சை நடத்தினர்.

இந்த போட்டியில் 6-1, 6-0 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று செரீனா வில்லியம்ஸ் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க ஓபன் ஒற்றையர் பிரிவில் 100 வெற்றிகளை பதிவு செய்துள்ளார் செரீனா.


அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் செரீனா வில்லியம்ஸ் இதுவரை 2-வது சுற்றில் 19 வெற்றிகளும் 3-வது சுற்றில் 18 வெற்றிகளும் நான்காவது சுற்றில் 16 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளார்.

காலிறுதி சுற்றில் 13 மற்றும் அரையிறுதி சுற்றில் 9 வெற்றிகளையும் செரீனா வில்லியம்ஸ் பதிவு செய்துள்ளார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பயின் பட்டத்தை 6 முறை வென்றுள்ளார்.

Also Watch

Loading...

First published: September 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...