புள்ளிப்பட்டியலில் அதிரடி மாற்றங்கள்: அரையிறுதி வாய்ப்பை இழக்கும் முக்கிய அணிகள்!

ICC World Cup 2019 | Points Table | அரையிறுதி கனவில் இருக்கும் இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை அணிகளுக்கு மகிப் பெரிய சாவலாக இருப்பது இந்திய அணி தான்.

Web Desk | news18
Updated: June 29, 2019, 8:42 PM IST
புள்ளிப்பட்டியலில் அதிரடி மாற்றங்கள்: அரையிறுதி வாய்ப்பை இழக்கும் முக்கிய அணிகள்!
ICC World Cup 2019
Web Desk | news18
Updated: June 29, 2019, 8:42 PM IST
உலகக் கோப்பை அரையிறுதி சுற்றுக்கு முன்னேற இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

உலகக் கோப்பை லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது. புள்ளிப்பட்டியலில் அடுத்த இடங்களில் இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை அணிகள் உள்ளன.

இங்கிலாந்து அணி 8 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. அடுத்த இரண்டு போட்டிகளில் இந்தியா, நியூசிலாந்தை அந்த அணி எதிர்கொள்ள உள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுவிட்டால் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும்.


இந்தியாவிற்கு எதிரான நாளைய போட்டியில் இங்கிலாந்து அணி தோற்றுவிட்டால் மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியை வைத்தே அரையிதி வாய்ப்பு உறுதி செய்யப்படும். மேலும் வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதும் போட்டியும் உள்ளது. இந்தப் போட்டியில் தோல்வியடையும் அணி அரையிறுதி வாய்ப்பை இழக்கும்.

இலங்கை அணி 6 புள்ளிகளுடன் இருந்தாலும் அரையிறுதிக்கான ரேஸில் அந்த அணியும் உள்ளது. இலங்கை அணி அடுத்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்ள உள்ளது. கடைசி போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது. இந்த 2 போட்டிகளும் இலங்கை அணிக்கு முக்கியமான போட்டியாகும். இந்த 2 போட்டிகளிலும் இலங்கை அணி மிகப்பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.Loading...

அரையிறுதி கனவில் இருக்கும் இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை அணிகளுக்கு மிகப் பெரிய சாவலாக இருப்பது இந்திய அணி தான். இந்த 3 அணிகளும் இந்தியாவை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தியாவிற்கு எதிரான போட்டிகளே அரையிறுதிக்கு யார் செல்வார்கள் என தீர்மானிக்கும் என்பதால் இனிவரும் போட்டிகளில் விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது.

Also Watch

First published: June 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...