'சோகம் இனி இல்லை அட இனி வானமே எல்லை..'- தன்னம்பிக்கை ஒன்றே போதும் - தினேஷ் கார்த்திக்
'சோகம் இனி இல்லை அட இனி வானமே எல்லை..'- தன்னம்பிக்கை ஒன்றே போதும் - தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்
ஐபிஎல் முடிந்த பிறகு இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடக்கிறது. ஜூன் 9-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை இந்த போட்டிகள் இந்தியாவில் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார். இதற்கு தன்னம்பைக்கையே தன் ஆயுதம் என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

தமிழ்நாட்டைச் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் போது வர்ணனையாளராக செயல்பட்டார். அதன் பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதற்காக கடினமாக உழைத்த இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முக்கிய காரணமாக இருந்துள்ளார்.
இந்திய அணிக்கு தேர்வாகியது குறித்து கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "உங்களை நீங்கள் நம்பினால், எல்லாம் சரியாகிவிடும். அனைவரின் ஆதரவுக்கும் நம்பிக்கைக்கும் நன்றி. கடின உழைப்பு தொடரும்" என தெரிவித்துள்ளார்.
If you believe yourself, everything will fall into place! ✨
Thank you for all the support and belief...the hard work continues... pic.twitter.com/YlnaH9YHW1
தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு திரும்பியுள்ளதை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
அவர் ஏற்கெனவே இது தொடர்பாக கூறும்போது, “நான் பயிற்சி எடுத்த விதமே வித்தியாசமானது. நான் இன்னும் முடிந்துவிடவில்லை என்று என் மனதுக்குள் நினைத்துக் கொள்வேன். எனக்கு ஒரு லட்சியம் இருக்கிறது அதை அடைந்தே தீருவேன் என்று எனக்குள் சொல்லிக் கொள்வேன்” என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்திய போதே முன்னமேயே தினேஷ் கார்த்திக் கூறியிருந்தார், அந்தப் போட்டியில் 23 பந்துகளில் 44 ரன்களை கார்த்திக் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.