புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் மகன்களுக்கு கிரிக்கெட் பயிற்சி! சேவாக்கிற்கு குவியும் பாராட்டு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் மகன்களுக்கு கிரிக்கெட் பயிற்சி! சேவாக்கிற்கு குவியும் பாராட்டு
  • Share this:
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களில் இருவரின் மகன்களுக்கு தனது பள்ளியில் கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்.

இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு மாணவர்கள் கிரிக்கெட் பயிற்சி எடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இவர்கள் சேவாக் சர்வதேச பள்ளியில் கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்வது எனது பாக்கியம் என்றுள்ளார். மேலும், அந்த 2 மாணவர்களும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் மகன்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சேவாக்கின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலர் அவரை பாராட்டி வருகின்றனர். நீங்கள் உண்மையான ஹீரோ ஏனென்றால் இந்தியாவின் ஹீரோக்களின் மகன்களை நன்றாக பார்த்து கொள்வீர்கள் என்று சேவாக்கை பாராட்டி உள்ளனர்.

Also Watch

First published: October 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...