Home /News /sports /

சேவாகின் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் கோலிக்கு இடமில்லை

சேவாகின் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் கோலிக்கு இடமில்லை

கோலி-சேவாக்

கோலி-சேவாக்

கடந்த டி20 உலகக்கோப்பையில் முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான், நியூசிலாந்திடம் செம உதை வாங்கி வெளியேறிய இந்திய அணி 2022-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடுவதற்கான முயற்சிகளையும் சரியான அணிச்சேர்க்கையை கொண்டு வரவும் பாடுபட்டு வருகிறது.

மேலும் படிக்கவும் ...

    விராட் கோலி கேப்டனாக, பேட்டராக பல சாதனைகள் புரிந்திருக்கலாம், அவரது கேப்டன்சியில் பெரிய கரும்புள்ளி, ஆஸ்திரேலியாவில் 36 ஆல் அவுட் ஆன பிறகு இந்தியாவுக்குத் திரும்பியது, பிறகு உலகக்கோப்பைகளில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற பெருமையும் உடையுமாறு டி20 உலகக்கோப்பையில் தோற்றது.

    இந்நிலையில் விரேந்திர சேவாக், இந்திய டி20 உலகக்கோப்பை அணி எப்படி அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். டாப் ஆர்டரில் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், கே.எல்.ராகுல்.

    “டி20-களில் ஹிட்டர்களுக்கு இந்திய அணியில் பஞ்சமில்லை, அதனால் டாப் 3-யில் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், கே.எல்.ராகுலை இறக்குவேன். உலக டி20-யில் வலது இடது சேர்க்கை பிரமாதமாக இருக்கும் எனவே ராகுல்-இஷான் கிஷன் அல்லது ரோஹித் -இஷான் கிஷன் சேர்க்கைக் கைகொடுக்கும்.

    இப்போதெல்லாம் ஒரு வேகப்பந்து வீச்சாளர் என்னை கவர்கிறார் என்றால் அது உம்ரன் மாலிக் தான். ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமியுடன் உம்ரன் மாலிக்கும் இந்திய அணியில் இடம்பெற வேண்டும்.

    ஐபிஎல் நமக்கு எண்ணற்ற திறமைகளை கொடுத்துள்ளது, அதில் உம்ரன் மாலிக் சமீபத்தியவர். இவர் அனைத்து வடிவங்களுக்குமான பவுலர்” என்றார்.

    ஆஸ்திரேலியாவில் அக்டோபர்-நவம்பரில் டி20 உலகக்கோப்பை நடைபெறும். இதிலும் இந்தியா-பாகிஸ்தான் மோதுகின்றன, கடந்த உலகக்கோப்பை தோல்விக்கு இந்தியா நிச்சயம் பழிவாங்கும் என்று பரவலான எதிர்பார்ப்பு உள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: T20 World Cup, Virat Kohli, Virender sehwag

    அடுத்த செய்தி