ஜார்க்கண்டிலிருந்து அச்சமற்ற இன்னொரு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மென் : தோனியை சூசகமாகச் சுட்டிக்காட்டி இஷான் கிஷனுக்கு சேவாக் பாராட்டு

சேவாக்.

அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் நேற்று கனவு அறிமுகப் போட்டியில் ஆடிய இஷான் கிஷனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. முதல் போட்டியென்று பாராமல் அச்சமற்ற கிரிக்கெட்டை அவர் வெளிப்படுத்தியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் நேற்று கனவு அறிமுகப் போட்டியில் ஆடிய இஷான் கிஷனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. முதல் போட்டியென்று பாராமல் அச்சமற்ற கிரிக்கெட்டை அவர் வெளிப்படுத்தியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

  32 பந்துகளில் 4 டவரிங் சிக்சர்களுடன் அரைசதம் கண்ட இஷான் கிஷன் ஆட்ட நாயகன் விருது வென்றார், இன்னொரு தடாலடி வீரர் ரிஷப் பந்த் நம்ப முடியாத இரண்டு சிக்சர்களுடன் 13 பந்துகளில் 26 ரன்கள் எடுக்க கேப்டன் விராட் கோலி 49 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 73 ரன்கள் விளாசி நாட் அவுட்டாக்த் திகழ இங்கிலாந்தின் 164 ரன்களை இந்திய அணி எளிதாக ஊதியது.

  நேற்று இஷானின் காட்டடி தர்பாரைப் பார்த்து சேவாக் ஆச்சரியமடைந்ததாகக் குறிப்பிட்டார்.  தற்போது ரோடு சேஃப்டி கிரிக்கெட் தொடரில் ஆடி வரும் சேவாக் இஷான் கிஷனை பாராட்டத் தவறவில்லை.

  ஆனால் பாவம், சூரியகுமார் யாதவுக்குத்தான் பேட்டிங் வாய்ப்பு கிடைக்காமல் போனது. அவர் மிகவும் ஆவலுடன் காத்திருந்தார். ஆனால் இஷான் கிஷன் கடந்த ஐபிஎல் தொடரில் 516 ரன்களை விளாசியதிலிருந்து அவர் இந்திய அணிக் கதவுகளைத் தட்டி வருகிறார்.

  சேவாக் தன் ட்விட்டர் பக்கத்தில் ஜார்கண்டிலிருந்து இன்னொரு அச்சமற்ற வீரர் நமக்குக் கிடைத்துள்ளார், ஆனால் இப்படி முன்னரும் நடந்துள்ளது என்று தோனி பெயரைக் குறிப்பிடாமல் சேவாக் ட்வீட் செய்துள்ளார்.

  சேவாக் ட்வீட் வருமாறு: ஜார்கண்டிலிருந்து இன்னொரு அச்சமற்ற விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மென். இவர் முன்னால் களமிறக்கப்பட்டார். தன் திறமையை நிரூபித்தார். இதற்கு முன்னரும் இப்படி நடந்துள்ளது. இஷான் கிஷனின் அச்சமற்ற தாக்குதல் பேட்டிங்கை நேசிக்கிறேன் என்று இஷான் கிஷன் ஷாட் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
  Published by:Muthukumar
  First published: