ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வரும் பேட்ஸ்மேன் பிரித்வி ஷா, ரஞ்சி கோப்பை தொடரில் புதிய சாதனை படைத்துள்ளார். ரஞ்சி கோப்பை தொடர்கள் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்திய அணிக்கு தேர்வு பெற, இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
ரஞ்சி தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் தேர்வுக்குழுவின் கவனத்தைப் பெற்று டெஸ்ட் அணியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்று வருகிறார்கள். சமீபகாலமாக ஐபிஎல் தொடரில் கலக்கும் வீரர்கள், இந்திய டி20 அணியில் இடம்பெறத் தொடங்கியுள்ளனர்.
1934 ஆம் ஆண்டில் இருந்து ரஞ்சி கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த பிரித்வி ஷா அசாம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 379 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். இவர் மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வருகிறார்.
383 பந்துகளை எதிர்கொண்டு 379 ரன்களை பிரித்வி ஷா எடுத்துள்ளார். இதில் 49 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். ஸ்ட்ரைக் ரேட் 98.96. இது ரஞ்சி கோப்பை தொடர் வரலாற்றில் எடுக்கப்பட்ட அதிகபட்சமான 2ஆவது ஸ்கோர் ஆகும். பிரித்வி ஷா இந்த போட்டியில் ரியான் பராக் பந்துவீச்சில், எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.
முன்னதாக 1948-49-இல் நடந்த ரஞ்சி கோப்பை தொடரின்போது பி.பி. நிம்பல்கர் 443 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதுவே ரஞ்சி தொடரில் தனிநபரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
கிரிக்கெட் உலகின் பாராட்டு மழையில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா… அப்படி என்ன செய்தார் தெரியுமா?
தனது 379 ரன்கள் மூலம் மஞ்ச்ரேக்கர் அடித்த 377* ரன்கள் என்ற 23 ஆண்டுகால சாதனையை, பிரித்வி ஷா தகர்த்துள்ளார். மேலும் முதல் தர போட்டிகளில் முச்சதம் அடித்த ரோகித் சர்மா, விரேந்தர் சேவாக் உள்ளிட்டோரின் லிஸ்ட்டில் இணைந்துள்ளார் பிரித்வி. தனது புதிய சாதனையின் மூலம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், தேர்வுக்குழுவினரின் கவனத்தை பிரித்வி ஷா பெற்றுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Ranji Trophy