ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டி20 உலகக்கோப்பையில் அடுத்த அதிர்ச்சி... 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய ஸ்காட்லாந்து

டி20 உலகக்கோப்பையில் அடுத்த அதிர்ச்சி... 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய ஸ்காட்லாந்து

ஸ்காட்லாந்து அணி வெற்றி

ஸ்காட்லாந்து அணி வெற்றி

West Indies vs Scotland | ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான டி20 உலககோப்பை போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி படு தோல்வி அடைந்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  8வது டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவில் நேற்று (அக்டோபர்) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம்,ஆப்கானிதான் அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இலங்கை , மேற்கு இந்திய தீவுகள், நமீபியா, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, யுஏஇ, ஜிம்பாபே, அயர்லாந்து அணிகள் தகுதி சுற்று போட்டியில் விளையாடி வருகிறது. இதில் தகுதி பெறும் நான்கு அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி விளையாட உள்ளது.

  இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டிகளில்

  நமிபியா மற்றும் நெதர்லாந்து அணிகள் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இன்றைய தகுதி சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து மற்றும் பலம் வாய்ந்த மேற்கு இந்திய தீவுகள் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

  அதன் படி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி தொடங்க வீரர் முன்சே அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் 66 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியில் ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 160 ரன்களை எடுத்தது. மேற்கு இந்திய தீவுகள் அணி தரப்பில் ஜோசப் மற்றும் ஸ்மித் தலா 2விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

  இதையும் படிங்க: இறுதி ஓவரின் 4 பந்துகளில் 4 விக்கெட்... ஷமியின் வேகத்தில் சுருண்டது ஆஸ்திரேலியா

  161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி ஸ்காட்லந்து அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது. 79 ரன்கள் எடுப்பதற்குள் மேற்கு இந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டை இழந்து தடுமாறியது. தொடர்ந்து சிறப்பாக பந்துவீச்சை ஸ்காட்லாந்து அணியினர் மேற்கு இந்திய தீவுகள் அணியை 18.3 ஓவர்களில் 118 ரன்களுக்கு சுருட்டி அதிர்ச்சி அளித்தது. மேற்கு இந்திய அணிகள் தீவுகள் அணி தரப்பில் ஜெசன் ஹோல்டர் மட்டுமே 38 ரன்களை எடுத்தார்.

  சிறப்பாக பந்துவீசிய ஸ்காட்லாந்து பந்துவீச்சாளர்கள் மார்க் வாட் அதிகப்பட்சமாக 3விக்கெட்டை வீழ்த்தினார். மேலும் பிராட் வீல் மற்றும் மைக்கேல் லீஸ்க் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். டி20 போட்டிகளில் பலம் வாய்ந்த அணியாகவும் இரண்டு முறை டி20 உலககோப்பையை வென்ற அணியான மேற்கு இந்திய தீவுகள் அணி ஸ்காட்லாந்து அணியிடம் தோல்வி அடைந்து இருப்பது அந்நாடு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல் போட்டியில் இலங்கை அணி நேற்று நமீபியாவிடம் தோல்வியடைந்த நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் தோல்வியடைந்து அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Scotland, T20 World Cup, West indies