Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

சதம் எடுத்த பிறகு 14 மேட்ச்கள் என்னை நீக்கினார்கள்- இதுதான் பிசிசிஐ-யின் உலக சாதனை: மனோஜ் திவாரி வேதனை

சதம் எடுத்த பிறகு 14 மேட்ச்கள் என்னை நீக்கினார்கள்- இதுதான் பிசிசிஐ-யின் உலக சாதனை: மனோஜ் திவாரி வேதனை

மனோஜ் திவாரி

மனோஜ் திவாரி

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்திய அணியில் புறமொதுக்கப்பட்ட திறமையான வீரர்களின் கதையைக் கேட்டால் வேதனையாகவே இருக்கும். அமோல் மஜூம்தார் என்ற ஒரு மும்பை வீரர், சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு மும்பையிலிருந்து ஒரு வீரர் என்றால் அது மஜூம்தார் தான் என்றார்கள் ஆனால் அவர் ஒரு சர்வதேசப்போட்டியைக் கூட ஆடவில்லை. அதே போல் அந்தக் காலத்தில் சுதாகர் ராவ் என்ற ஒரு கர்நாடக வீரர் இருந்தார் பாவம் சர்வதேச கிரிக்கெட் பக்கம் தலைவைத்துப் படுத்ததில்லை.

கர்நாடகாவில் அதிதிறமை வாய்ந்த ரகுராம் பட் என்ற ஒரு அருமையான இடது கை ஸ்பின்னரின் இந்திய அணி வாழ்வும் அல்பாயுசில் முடிந்தது. நம் தமிழ்நாட்டின் டி.ஏ.சேகர், இவர் இன்று நமக்கு எம்.ஆர்.எஃப். வேகப்பந்து அகாடமி மூலம் நிறைய வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கி கொடுக்கிறார், ஆனால் அவர் கரியர்? தொடங்கும் முன்பே முடிந்து போனது. கடைசியாக மிகப்பரிதாபமான விவகாரம் பங்கஜ் சிங் என்ற ராஜஸ்தான் பவுலர், இவரை ஒழித்தாற்போல் வேறு ஒருவரையும் ஒழித்திருக்க முடியாது.

அதே கதைதான் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மனோஜ் திவாரி கதையும். இவர் இப்போது திரிணாமூல் காங்கிரஸில் சேர்ந்து அமைச்சராகவும் ஆகி விட்டார், ஆனால் கிரிக்கெட் என்பது எத்தனைபெரிய கனவு, அது நிறைவேறு அல்பாயுசில் முடியும் என்றால் எத்தனை வேதனை.

மனோஜ் திவாரி 2008-ல் இந்திய அணிக்கு அறிமுகமாகிறார், 12 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் 3 டி20களில் இந்தியாவுக்காக ஆடினார். ஆனால் இந்த 12 ஒருநாள், 3 டி20 போட்டிகளை ஆட 7 ஆண்டுகள் ஆகிவிட்டது, 8 வேறு வேறு தொடர்களில் ஆடினார். தொடர்ச்சியான வாய்ப்பு மறுக்கப்பட்டது. முதலில் காயமடைந்தார் பிறகு மீண்டு வந்த போது வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இது தொடர்பாக அவர் கூறும்போது, “இப்போது பரவாயில்லை 4-5 மேட்ச்கள் சொதப்பினாலும் வாய்ப்பு கிடைக்கிறது. நான் ஆடிய போது இப்படியிருந்திருந்தால் எனக்கு அது உதவியிருக்கும். ஏனெனில் நான் மே.இ.தீவுகளுக்கு எதிராக சதம் எடுத்தேன், நான் ஆட்ட நாயகனாகவும் அறிவிக்கப்பட்டேன். ஆனாலும் அடுத்த 14 மேட்ச்களுக்கு என்னை நீக்கினார்கள், ஆடும் லெவனில் இடம் இல்லை.

நிச்சயம் ஏன் என்று இந்தக் கேள்வியை அப்போது அணித்தேர்வாளர்களாக, அதிகாரத்தில் இருப்பவர்களை கேள்வி கேட்பேன்.சதம் எடுத்த பிறகு 14 மேட்ச் ட்ராப் என்பதன் மூலம் உலக சாதனை புரிந்தேன். மீண்டும் அணியில் எடுத்தார்கள் அப்போது 4 விக்கெட்டுகள் எடுத்தேன் 65 ரன்களையும் எடுத்தேன். அப்போதும் வாய்ப்பு தொடர்ந்து கிடைக்கவில்லை.

முதிர்ச்சியடைய அடைய இதெல்லாம் நினைவில் நிற்பதில்லை, ஆனால் சில வேளைகளில் நான் இதை நினைத்து வேதனையடைகிறேன். எனக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கியிருந்தால் நிச்சயம் நிரூபித்திருப்பேன். இப்போதிருக்கும் நிர்வாகம் அப்போதிருந்தால் நான் நிச்சயம் சோபித்திருப்பேன்.

இப்போது பாருங்கள் எத்தனை சுதந்திரமாக ஆடுகிறார்கள், காரணம், டீமை விட்டு தூக்கிவிடுவார்கள் என்ற பயம் இல்லை. விக்கெட் எடுக்கிறார்களோ இல்லையோ, ரன் அடிக்கிறார்களோ இல்லையோ நிர்வாகம் வீரர்களுக்கு ஆதரவு தருகிறது. இதைப் பார்க்கும் போது எனக்கு தோன்றுகிறது 4 இன்னிங்ஸை வைத்து ஒருவரது கரியரையே முடிவு கட்டி விட முடியாது என்பதுதான்.

இப்போது பாருங்கள் ரிஷப் பண்ட் மீது விமர்சனம் எழுந்தது, ஆனால் ராகுல் திராவிட் தெளிவாக அவருக்கு ஆதரவு அளித்தார்.”இவ்வாறு கூறினார் மனோஜ் திவாரி.

First published:

Tags: Cricket