இந்தியா- மேற்கு இந்திய தீவுகள் மோதும் மும்பை ஒருநாள் போட்டி நடப்பதில் சிக்கல்?

மும்பை கிரிக்கெட் சங்கத்தில் இன்னும் குழப்பங்கள் தீராததால் மும்பையில் ஒருநாள் போட்டி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா- மேற்கு இந்திய தீவுகள் மோதும் மும்பை ஒருநாள் போட்டி நடப்பதில் சிக்கல்?
மும்பை வான்கடே மைதானம்
  • Cricketnext
  • Last Updated: October 11, 2018, 5:58 PM IST
  • Share this:
மும்பை கிரிக்கெட் சங்கத்தில் இன்னும் குழப்பங்கள் தீராததால் வரும் 29-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் அணிகள் இடையே ஒருநாள் போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு தற்காலிக நிர்வாகிகள் குழு அமைத்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தற்காலிக குழுவில் இருந்த இரண்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடந்த மாதம் பதவியில் இருந்து விலகினர்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி வரும் 29-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இந்நிலையில், போதிய நிதி இல்லாத காரணத்தால் போட்டியை பிசிசிஐ-யே ஏற்று நடத்த வேண்டும் என மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் பிசிசிஐயின் சி.இ.ஓ-விடம் முறையிடப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


இதற்கிடையே, மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு உடனே நிர்வாக குழுவை அமைக்க வேண்டும் என சங்கத்தின் செயலாளர் உமேஷ் கன்வில்கர் மும்பை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் சென்று தீர்வு பெற்றுக்கொள்ளுமாறு மும்பை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இரண்டு அல்லது மூன்று தினங்களில் உச்ச நீதிமன்றத்தில் இவ்விவகாரம் தொடர்பாக முறையிடப்பட உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பொறுத்தே மும்பை வான்கடே மைதானத்தில் போட்டி நடக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும், மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் மீண்டும் பிசிசிஐயிடம் முறையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: October 11, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்