இந்தியா வெற்றி பெற ஆசைப்படும் பாகிஸ்தான் கேப்டனின் தாய்மாமா!

பாகிஸ்தான் கேப்டன் சர்பிரஸ் அகமதுவின் தாய்மாமாவான மஹ்மூத் ஹஸன் என்பவர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் எட்டவா நகரில் வாழ்ந்து வருகிறார். 

இந்தியா வெற்றி பெற ஆசைப்படும் பாகிஸ்தான் கேப்டனின் தாய்மாமா!
சர்பிரஸ் அகமது தாய்மாமா
  • News18
  • Last Updated: June 15, 2019, 9:18 PM IST
  • Share this:
இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இந்தியா வெற்றி பெறவேண்டும் என்று பாகிஸ்தான் கேப்டன் சர்பிரஸ் அகமதுவின் தாய்மாமா தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இரு நாட்டு ரசிகர்களும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் பரபரப்பான போட்டி நாளை மான்ஸ்செஸ்டர் மைதானத்தில் நடக்கிறது.

இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்டன. இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி என்பதால் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில தினங்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுவிட்டன.


இந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இதனால் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உலகக் கோப்பை போட்டியில் நாளை இந்தியா அணி வெற்றிபெற வேண்டும் என பாகிஸ்தான் கேப்டன் சர்பிரஸ் அகமதுவின் தாய்மாமா விருப்பம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கேப்டன் சர்பிரஸ் அகமதுவின் தாய்மாமாவான மஹ்மூத் ஹஸன் என்பவர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் எட்டவா நகரில் வாழ்ந்து வருகிறார்.

நாளைய போட்டி எப்படி அமையும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு இன்று பதிலளித்த அவர், ’நாளை இந்தியா வெற்றிபெற வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். அதேவேளையில், என்னுடைய மருமகன் சர்பிரஸ் அகமதுவும் நன்றாக விளையாடி பாகிஸ்தான் அணியின் கேப்டனாக நீடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.Also see:

First published: June 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading