தொடர்ந்து 2 ரஞ்சி சீசன்களில் 900 ரன்களுக்கும் மேல் அடித்துள்ளார் மும்பை அணியின் சர்பராஸ் கான். வெங்சர்க்கார் சொன்னது போல் அவரை இந்நேரம் அணியில் எடுத்திருக்க வேண்டும். ஆனால் ஷ்ரேயஸ் அய்யரே இப்போதுதான் டெஸ்ட் அணிக்குள் நுழைந்துள்ளார், வாய்ப்பு என்பது இப்போதெல்லாம் இந்திய அணியில் நிறைய இருக்கிறது அதே வேளையில் கடினம் என்றும் கூற வேண்டியுள்ளது.
இந்நிலையில் அடுத்து பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நிச்சயம் சர்பராஸ் கான் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படுவார் என்று பிசிசிஐயின் பெயர் கூற விரும்பாத ஆதாரத்தை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
“இனி அவரை ஒதுக்க முடியாது. அவரது ஆட்டமே அவரது திறமையைப் பேசுகிறது. இந்திய அணியில் பலருக்கும் சர்பராஸ் கான் நெருக்கடியையும் அழுத்தத்தையும் ஏற்றியுள்ளார். தேர்வாளர்கள் கூடி பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் அணியைத் தேர்வு செய்யும் போது சர்பராஸ் கான் வாய்ப்பு வழங்கப்படுவார் என்றே நினைக்கிறோம். இந்தியா ஏ அணிக்காக கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் சிறப்பாக ஆடினார் சர்பராஸ் கான், அனைத்தையும் விட பிரமாதமான பீல்டர் அவர்” என்று ஆங்கில ஊடகத்திடம் பேசிய பிசிசிஐ-யைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சர்பராஸ் கான் முன்னதாக தன் இன்னிங்ஸ்கள் பற்றி கூறும்போது, “என்ன நடந்தாலும், எனது விக்கெட்டைத் தூக்கி எறிய மாட்டேன் நான் 300 பந்துகள் விளையாட வேண்டியிருந்தாலும் ஆடியே தீருவேன் என்பதே எனது நோக்கமாக இருந்தது. நான் அதிக பந்துகளை விளையாடினால், எனது ஸ்கோரும் பெரிதாக இருக்கும்" என்றார்.
இவரது ஆட்டத்தை தேசிய அணி தேர்வாளர் சுனில் ஜோஷியும் பார்த்தா, அவரும் சர்பராஸ் கானிடம் பேசியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India Vs England