பாகிஸ்தான் கேப்டன் பொறுப்பிலிருந்து சர்ஃபராஸ் அகமது திடீர் நீக்கம்!

பாகிஸ்தான் கேப்டன் பொறுப்பிலிருந்து சர்ஃபராஸ் அகமது திடீர் நீக்கம்!
சர்ஃபராஸ் அகமது
  • Share this:
பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் மற்றும் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து சர்ஃபராஸ் அகமது நீக்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு பின் அணியில் அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டது. தலைமை பயிற்சியாளர் உள்ளிட்ட அனைத்து பயிற்சியாளர்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் மிஸ்பா-உல்-ஹக் நியமிக்கப்பட்டார். இதன்பின் சொந்த மண்ணில் இலங்கை அணியுடன் பாகிஸ்தான் மோதியது. 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணி விளையாடியது. ஒரு நாள் போட்டியை 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி வென்றது.


டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் இலங்கையிடம் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது. டி20 கிரிக்கெட்டில் முதலிடத்தில் இருக்கும் பாகிஸ்தான் இலங்கையிடம் தோல்வி அடைந்தால் ரசிகர்கள் விரக்தி அடைந்தனர். இதனால் கேப்டன் சர்ஃபராஸ் மீது பயிற்சியாளர் மிஸ்பா அதிருப்தியில் இருந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் மற்றும் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து சர்ஃபராஸ் அகமது திடீரென நீக்கப்பட்டுள்ளார். டி20 அணிக்கு பாபர் அசாமும், டெஸ்ட் அணிக்கு அசார் அலியும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Also Watch

Loading...

First published: October 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...