HOME»NEWS»SPORTS»cricket santha moorthy 41 year old puducherry pacer who wrecked mumbai mut

மும்பை அணியை அலறவிட்ட புதுச்சேரி சாந்த மூர்த்தி: 41 வயதில் டி20 சாதனை புரிந்த வேகப்பந்து வீச்சாளர்

17-18 வயது முதல் கிரிக்கெட் ஆடி வருகிறேன், வயது ஒரு பொருட்டல்ல, இன்னும் எனக்கு உற்சாகமும் ஆர்வமும் உள்ளது என்பதே என்கிறார் சாந்த மூர்த்தி.

மும்பை அணியை அலறவிட்ட புதுச்சேரி சாந்த மூர்த்தி: 41 வயதில் டி20 சாதனை புரிந்த வேகப்பந்து வீச்சாளர்
புதுச்சேரி அணியின் 41 வயது வேகப்பந்து வீச்சாளர் சாந்த மூர்த்தி.
  • Share this:

பிரவீண் தாம்பே என்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்பின்னர் ஐபிஎல் தொடரில் சாதித்த போது அவருக்கு வயது 42. அதனையடுத்து தற்போது புதுச்சேரி கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சாந்த மூர்த்தி டி20- கிரிக்கெட் வரலாற்றில் 41 வயதில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சாதனையாளர் ஆனார்.

நேற்று சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட்டின் குரூப் ஈ போட்டி மும்பைக்கும் புதுச்சேரிக்கும் இடையே நடைபெற்றது. இதில் சூரியகுமார் யாதவ் தலைமை மும்பை அணி முதலில் பேட் செய்ய புதுச்சேரி முதிர் காளை சாந்த மூர்த்தி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதுவும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆதித்ய தாரே, சூரியகுமார் யாதவ், சித்தேஷ் லாத், சுஜித் நாயக் ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றி மும்பையை அதிர்ச்சிகரமாக 94 ரன்களுக்குச் சுருட்டினார்.



தொடர்ந்து ஆடிய புதுச்சேரி 95/4 என்று தன் முதல் வெற்றியைப் பதிவு செய்தது, மும்பை படுமோசமாக தன் 4வது தோல்வியைப் பதிவு செய்தது. இதுவரை ஒரு போட்டியைக் கூட வெல்லவில்லை.

இந்த சாந்த மூர்த்தி மெட்ராஸ் கிரிக்கெட் கிளப், மற்றும் சில உள்ளூர் கிளப்புகளுக்கு ஆடியுள்ளார். பிறகு புதுச்சேரி சென்றதால் அவருக்கு முதல் தர கிரிக்கெட் வாய்ப்பு கிடைத்தது, அதுவும் கடந்த ஆண்டுதான். இதில் தன் அறிமுகப் போட்டியிலேயே நாகாலந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற புதுச்சேரி அபார இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. ரஞ்சி முடிந்தவுடனேயே கொரோனா லாக் டவுன் அமலுக்கு வந்தது.

அதன் பிறகு நேற்று மும்பைக்கு எதிராக தன் 41 வயதில் சாந்த மூர்த்தி என்ற இந்த வலது கை வேகப்பந்து வீச்சாளர் அசத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தி இந்து ஸ்போர்ட்ஸ்டாருக்குக் கூறும்போது, “மும்பைக்கு எதிராக 5 விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு, அது நிறைவேறியது. அதுவும் அவர்களின் வான்கடே மைதானத்தில். நிறைய வீரர்களுக்கு வான்கடேவில் ஆட வாய்ப்புக் கிடைக்காது. என் கிரிக்கெட் வாழ்வில் இது ஒரு மிகப்பெரிய முக்கிய அம்சமாகும்” என்றார்.

தமிழ்நாடு பிரிமியர் லீகில் காரைக்குடி காளைகள் அணியில் இருந்துள்ளார். இவர் புதுச்சேரி சட்டக்கல்லூரியில் பணியாற்றுகிறார். அங்கு ஒரு ஸ்போர்ட்ஸ் கடையும் வைத்துள்ளார்.

17-18 வயது முதல் கிரிக்கெட் ஆடி வருகிறேன், வயது ஒரு பொருட்டல்ல, இன்னும் எனக்கு உற்சாகமும் ஆர்வமும் உள்ளது என்பதே என்கிறார் சாந்த மூர்த்தி.
Published by:Muthukumar
First published: