சமீப காலமாகவே சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அதிகமாக வழங்கப்படுவதில்லை என அவரது ரசிகர்கள் குற்றம்சாட்டிய வண்ணம் இருக்கிறார்கள். இந்த நிலையில் இலங்கையுடனான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு சூர்ய குமார் யாதவ் சஞ்சு சாம்சன் குறித்து காட்டிய சைகை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. ஏற்கனவே டி20 தொடரை வென்ற இந்தியா, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் முதல் இரண்டு போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் நேற்று நடந்த ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்தது.
விராட் கோலி அதிகபட்சமாக 166 ரன்களும் சுப்மன் கில் 116 ரன்கள் எடுத்தனர். இலங்கை அணி 73 ரன்கள் மட்டுமே எடுக்க இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. ஆனால் இலங்கைக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சனுக்கு அதிகமாக வாய்ப்பளிக்கவில்லை. டி20 தொடரில் அவர் அணியில் இடம்பெற்றிருந்தாலும் அவரின் ஆட்டம் பெரிதாக பிரகாசிக்கவில்லை. காயம் காரணமாக அவர் வெளியேறினார்.
ஒருநாள் தொடரில் அவர் அணியிலும் இடம்பெறவில்லை. இந்நிலையில் நேற்றைய இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் எங்கே இருக்கிறார் என்ற ரசிகர்களின் கேள்விக்கு என்னுடைய இதயத்தில் இருக்கிறார் என்ற சூர்ய குமாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
When fans from #Trivandrum asked #SKY where is Sanju 🤩 @IamSanjuSamson @surya_14kumar @rajasthanroyals #SanjuSamson #SuryakumarYadav #IndianCricketTeam #INDvSL #Thiruvananthapuram #kerala pic.twitter.com/r1QL858iFd
— Trivandrum Indian (@TrivandrumIndia) January 15, 2023
சஞ்சு சாம்சன் அடுத்து வரவிருக்கும் நியுசிலாந்து தொடரிலிருந்தும் காயம் காரணமாக விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ind vs SL, India v Srilanka, Sanju Samson, Suryakumar yadav