Home /News /sports /

பரிதாப சஞ்சு சாம்சன்! எந்த அணியிலும் இடமில்லை: ஆஸ்திரேலியா, தெ.ஆ. தொடருக்கான டி20 அணி அறிவிப்பு

பரிதாப சஞ்சு சாம்சன்! எந்த அணியிலும் இடமில்லை: ஆஸ்திரேலியா, தெ.ஆ. தொடருக்கான டி20 அணி அறிவிப்பு

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார், உண்மையில் ஒரு உண்மையான திறமை படைத்த வீரரை அழிக்கும் செயலைத்தான் இந்திய தேர்வுக்குழுவினர் செய்து வருகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India
  இந்திய அணியில் இடம்பெற வேண்டுமென்றால் ஒன்று வலுவான ஐபிஎல் அணியில் ஆட வேண்டும், உதாரணமாக மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு ஆடவேண்டும், இல்லையெனில் பெரிய கமர்ஷியல் லாபி இருக்க வேண்டும். இந்த இரண்டு பின்னணியுமே இல்லாததால் சஞ்சு சாம்சன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.

  ஒரு உண்மையான திறமை படைத்த வீரரை அழிக்கும் செயலைத்தான் இந்திய தேர்வுக்குழுவினர் செய்து வருகின்றனர்.
  ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை அணியிலும் சஞ்சுவுக்கு இடமில்லை, இங்கு பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டி20 அணியிலும் சஞ்சு இல்லை. கேட்டால் உலகக்கோப்பை டி20 அணி வீரர்களுக்கு பயிற்சிக்காக தான் என்பார்கள்.

  தினேஷ் கார்த்திக்கை பேருக்கு அணியில் வைத்திருப்பார்கள், லெவனில் எடுக்க மாட்டார்கள். லெவனில் எடுத்தாலும் ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், அக்சர் படேல் ஆகியோருக்கு பிறகு இறக்குவார்கள் அப்படி இறக்க முடியாவிட்டால் கார்த்திக்கிற்கு பவுலிங் கொடுப்பார்கள். லோக்கல், ஊர் அணிகளின் மனநிலையில் ஒரு தேசிய அணி செயல்படுகிறது.

  ஒரே ஒரு ஆறுதல் விஷயம் ஒழிக்கப்பட்ட மொகமது ஷமியை ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 அணிகளில் எடுத்துள்ளனர், டி20 உலகக்கோப்பை அணியில் ஏதோ ஷமி இப்போதுதான் யு-19 முடித்து விட்டு வந்தவர் போல் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். ராகுல் திராவிட் -ரோஹித் சர்மா கூட்டணியின் செயல்பாடுகள் ரவிசாஸ்திரி-கோலியை விடவும் மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது.

  இதையும் படிங்க: இந்திய அணியின் கேப்டனாகிறார் ஷிகர் தவான், லஷ்மண் பயிற்சியாளர்...

  பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா கூறுவது போல், ‘ஒரு ஸ்திரமான அணியை உருவாக்க முடியவில்லை’ என்பதே ஐசிசி தொடர்களில் இந்திய அணியின் வெளியேறுதல்களுக்குக் காரணமாகியுள்ளது. இன்னும் ஷார்ட் பிட்ச் பந்தை ஆடத்தெரியவில்லை, ஆஸ்திரேலிய பிட்ச்களில் பந்துகள் எகிறும் என்பதும் கவனத்துக்குரியது.

  இந்நிலையில் சஞ்சு சாம்சனை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஷிகர் தவான் தலைமை உப்புமா அணியில் சேர்ப்பார்கள். ஆனால் இதுவும் சஞ்சுவுக்கு ஒரு வாய்ப்பு என்றே கூறப்படும். ராகுல் திவேத்தியா, உம்ரான் மாலிக், ராகுல் திரிபாதி, இடது கை வேகப்பந்து வீச்சாளர், ஐபிஎல்-க்கு ஆடிய மோசின் கான் ஆகியோருக்கு யார், எப்போது வாய்ப்பளிக்கப் போகிறார்கள்?

  இந்திய டி20 அணி விவரம்:
  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் : ரோஹித், ராகுல், கோலி, சூரியகுமார், ஹூடா, பண்ட், கார்த்திக், பாண்டியா, அஸ்வின், செஹல் அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஷமி, ஹர்ஷல் படேல்,  தீபக் சாஹர், பும்ரா.
  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்: ரோஹித், ராகுல், கோலி, சூரியகுமார், ஹூடா, பண்ட், கார்த்திக், பாண்டியா, அஸ்வின், செஹல் அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஷமி, ஹர்ஷல் படேல்,  தீபக் சாஹர், பும்ரா.
  Published by:Murugesh M
  First published:

  Tags: Cricket, Sanju Samson, Team India

  அடுத்த செய்தி