கபில்தேவுக்குப் பிறகு ஜடேஜாதான் சிறந்த ஆல்ரவுண்டரா?- நெட்டிசன் ட்வீட்டுக்கு மஞ்சுரேக்கர் பதில்

கபில்தேவுக்குப் பிறகு ஜடேஜாதான் சிறந்த ஆல்ரவுண்டரா?- நெட்டிசன் ட்வீட்டுக்கு மஞ்சுரேக்கர் பதில்

சஞ்சய் மஞ்சுரேக்கர்.

அஸ்வின் ஜடேஜாவுக்கு முன்னால் களமிறங்கி வந்தார். அஸ்வின் 4 டெஸ்ட் சதங்கள் எடுத்தவர்,

 • Share this:
  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரஹானேவுடன் 121 ரன்கள் கூட்டணி அமைத்த ரவீந்திர ஜடேஜா 57 ரன்கள் எடுத்து முக்கியப் பங்களிப்புச் செய்தார்.

  இதோடு ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய போது இரண்டு முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் ட்விட்டர்வாசிகள் ஜடேஜா மீது பாசத்தைப் பொழிந்து தள்ளி வருகின்றனர்.

  ட்விட்டரில் நிறைய கருத்தோட்டங்கள், விமர்சனங்கள், பாராட்டுகள் பதிவிடப்பட்டு வரும் நிலையில் ஒரு டிவிட்டர்வாசி ‘ஜடேஜாதான் கபில்தேவுக்குப் பிறகு பெரிய ஆல்ரவுண்டர் என்று பதிவிட்டார்.

  ஜடேஜாவை விமர்சிப்பதில் மஞ்சுரேக்கர் வல்லவர், அப்படி விமர்சித்து நெட்டிசன்களிடத்திலும் ஜடேஜாவிடமுமே கூட அவர் நிறைய வசைகளை வாங்கியுள்ளார் என்பது நாம் அறிந்ததே.

  ஜடேஜாவை துண்டு துணுக்கு வீரர் என்று 2019 உலகக்கோப்பையின் போது அழைத்து வகையாக பலரிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டார் மஞ்சுரேக்கர்.

  இந்நிலையில் ட்விட்டர்வாசி ஜடேஜாவைப் பற்றி கூறிய கருத்துக்கு வினையாற்றிய மஞ்சுரெக்கர், “ஜடேஜாவை நான் எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டராக பாராட்டுவேன், டெஸ்ட் கிரிக்கெட்தான் அவரிடம் வலுவானதாக இருக்கிறது.

  2015-க்குப் பிறகு ஜடேஜாவுக்கு பேட்ஸ்மெனாக மாற்றம் ஏற்பட்டது. இதே காலக்கட்டத்தில் அஸ்வின் ஜடேஜாவுக்கு முன்னால் களமிறங்கி வந்தார். அஸ்வின் 4 டெஸ்ட் சதங்கள் எடுத்தவர், ஜடேஜாவுக்கு அப்போது சதம் இல்லை. ஸ்பின்னராக அஸ்வினிடம் அணியில் போட்டியிட்டார் ஜடேஜா.

  அஸ்வினின் பேட்டிங் சரிவு காண ஜடேஜா பேட்டிங் எழுச்சி பெற்றது. முதல் தர கிரிக்கெட்டில் ஜடேஜா பெரிய ரன்களைக் குவித்தவர் ஜடேஜா. ” என்றார் மஞ்சுரேக்கர்.
  Published by:Muthukumar
  First published: