எனக்கும் மனசு வலிக்கிறதுச் சாரி- அஸ்வின் கிண்டலுக்கு மஞ்சுரேக்கர் மீண்டும் பதில்

ரவிச்சந்திரன் அஸ்வின்

‘அப்படி சொல்லாதடா ச்சாரி’, அஸ்வினின் அன்னியன் கலாய் மீமுக்கு சஞ்சய் மஞ்சுரேக்கர் பதிலடி கொடுத்துள்ளார். 

 • Share this:
  இந்தியாவின் நடப்பு டெஸ்ட் அணியில், உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வினை ‘அனைத்துக் காலத்துக்குமான சிறந்த வீரர்’ என்று என்னால் கருத முடியாது என்று ஒரு சீண்டல் சீண்ட அது சமூக ஊடகங்களில் பற்றிக் கொண்டுள்ளது.

  அஸ்வினை அப்படி கூறாதீர்கள் என்று அஸ்வினுக்கு ஆதரவாக இயன் சாப்பல் முதல், அபினவ் முகுந்த், தினேஷ் கார்த்திக் மற்றும் ரசிகர்கள் என்று ஒரு பட்டாளமே வரிந்து கட்டிக் கொண்டு அஸ்வினின் திறமைகளைப் பட்டியலிட்டு வருகின்றனர்.

  எல்லா காலத்திலும் சிறந்த வீரர்’ என அஸ்வினை கூற முடியாது என கூறியதற்காக முன்னாள் இந்திய அணி வீரர் மஞ்சரேக்கரை அந்நியன் பட மீம் ஒன்றினை பயன்படுத்தி சமூக வலைத்தளத்தில் கவுண்டர் கொடுத்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த விவகாரம் குறித்து பதிலடி கொடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின், அதாவது, அந்நியன் படத்தில் நடிகர் விக்ரமுக்கும், விவேக்குமான டயலாக்கான ‘அப்படி சொல்லாதடா ச்சாரி, மனசெல்லாம் வலிக்கிறது’ என மீம் ஒன்றை பகிர்ந்து சிரிக்கும் எமோஜிகளை தன்னுடைய பதில் மூலம் கலாய்த்துள்ளார் அஸ்வின். அஸ்வினின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

  மேலும் தமிழ் தெரியாதவர்களுக்கு, இது ஒரு படத்தின் டயலாக் என்ற பின்குறிப்பையும் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.  இதற்கும் பதிலளித்த சஞ்சய் மஞ்சுரேக்கர் தன் பதிவில் “Also Chaari, my heart aches to see simple, straightforward, cricketing assessments kick up a fuss these days😂😂😂” என்று கூறியுள்ளார்.

  அதாவது என்ன செய்யறது சாரி, சாதாரணமான நேரடியான கிரிக்கெட் மதிப்பீடுகள் கூட பெரிய சர்ச்சைகளைக் கிளப்புவதில் என் மனசும்தான் சாரி வலிக்கிறது என்ற தொனியில் மஞ்சுரேக்கர் பதில் அளித்துள்ளார்.
  Published by:Muthukumar
  First published: