• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Ravichandran Ashwin: எல்லா காலத்திலும் சிறந்த வீரராக அஸ்வினை ஏற்க முடியாததற்கு இது தான் காரணம் - சஞ்சய் மஞ்சரேக்கர்!

Ravichandran Ashwin: எல்லா காலத்திலும் சிறந்த வீரராக அஸ்வினை ஏற்க முடியாததற்கு இது தான் காரணம் - சஞ்சய் மஞ்சரேக்கர்!

ரவிச்சந்திரன் அஸ்வின்

ரவிச்சந்திரன் அஸ்வின்

‘எல்லா காலத்திலும் சிறந்த வீரர்’ என மக்கள் அஸ்வினை பற்றி பேசத் தொடங்கும் போது, ​​எனக்கு அதனை ஏற்றுக்கொள்வதில் சில சிக்கல்கள் உள்ளன.

  • Share this:
சமகால இந்திய கிரிக்கெட்டர்களில் சிறந்த ஒரு ஸ்பின்னராகவும், ஆல்ரவுண்டராகவும் விளங்குபவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். டெஸ்ட் கிரிக்கெட்டில் முத்திரை பதித்து மிக குறைந்த இன்னிங்ஸ்களில் 50, 100, 150, 200, 350, 350, 400 விக்கெட்களை கடந்த பெருமை இவருக்கு உண்டு.

ஆனால் அஸ்வினை தன்னால் எல்லா காலத்திலும் சிறந்த ஒரு வீரராக (All-Time Great) குறிப்பிட முடியாது என தெரிவித்து அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறார் முன்னாள் இந்திய அணி வீரரும், பிரபல கிரிக்கெட் வர்ணணையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர்.

இ.எஸ்.பி.என் கிரிக்இன்ஃபோ-வின் யூடியூப் தளத்தில் கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற சஞ்சய் மஞ்சரேக்கர், அஸ்வினை தன்னால் எல்லா காலத்திலும் சிறந்த வீரர் என ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின்


ரவிச்சந்திரன் அஸ்வின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் விளையாடி வருவதை பார்க்கும் போது அவர் ஒரு சிறந்த வீரர் என்று நான் நினைக்கிறேன், ஆனால் ‘எல்லா காலத்திலும் சிறந்த வீரர்’ என மக்கள் அஸ்வினை பற்றி பேசத் தொடங்கும் போது, ​​எனக்கு அதனை ஏற்றுக்கொள்வதில் சில சிக்கல்கள் உள்ளன.

அஸ்வினிடம் உள்ள ஒரு அடிப்படை பிரச்னை என்னவென்றால் SENA என சொல்லக்கூடிய தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் உள்ள மைதானங்கள் பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு உகந்ததாகும். ஆனால் இந்திய வீரர்கள் இங்கு திணறலை சந்திக்கின்றனர். ஆச்சரியம் தரும் வகையில் மேற்கண்ட இந்த 4 நாடுகளில் அஸ்வின் ஒரு முறை 5விக்கெட் வீழ்த்தியதில்லை. இந்த நாடுகளில் ஒன்றில் கூட அவர் 5 விக்கெட் வீழ்த்தியதில்லை.

Also Read:    அந்த 302 அதிர்ஷ்டசாலிகளுள் நானும் ஒருவன் என்பது மிகவும் ஸ்பெஷல் - மனம் திறந்த தினேஷ் கார்த்திக்!

அஸ்வின் உள்ளூர் பிட்ச்களில் சிறப்பாக விளையாடக்கூடியவர். அவருக்கு ஏற்ற அல்லது உகந்த ஆடுகளங்களில் விளையாடும் போது அவர் சிறந்த வீரர் தான். ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் தொடர் முழுதும் விக்கெட் வீழ்த்துவதில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நிகராக ரவீந்திர ஜடேஜா முன்னேறியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனவே பிற வீரர்களை கடந்த ஒரு வீரராக என்னால் அஸ்வினை பார்க்க முடியவில்லை. அதே நேரத்தில் அக்ஸர் பட்டேல் அஸ்வினைக் காட்டிலும் இந்த பிட்ச்களில் கூடுதல் விக்கெட்களை எடுத்திருக்கிறார். எனவே தான் அஸ்வினை என்னால் எப்போதும் சிறந்த வீரராக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என மஞ்சரேக்கர் தெரிவித்தார்.

Also Read:   விராட் கோலியை திகிலூட்டிய அந்த ஒரு ஓவர்.. காரணம் மகேந்திர சிங் தோனி தான்!

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் அஸ்வின் 4வது இடத்தை பிடித்துள்ளார். அவர் ஹர்பஜன் சிங், கபில் தேவ் மற்றும் அனில் கும்பிளேவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். 78 டெஸ்ட் போட்டிகளில் 409 விக்கெட்களை அஸ்வின் வீழ்த்தியிருக்கிறார்.

பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி டெஸ்ட் வீரர்கள் வரிசையில் இரண்டாம் இடமும், ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் 4ம் இடமும் பிடித்துள்ளார் 34 வயதாகும் அஸ்வின்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: