பிசிசிஐ வர்ணனைக் குழுவிலிருந்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நீக்கம்?

பிசிசிஐ வர்ணனைக் குழுவிலிருந்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நீக்கம்?
சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
  • Share this:
பிசிசிஐ வர்ணனைக் குழுவிலிருந்து முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நீக்கப்பட்டுளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடர் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. தர்மசாலாவில் நடைபெற இருந்த முதல் ஒரு நாள் போட்டி தொடர் மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இந்த தொடரில் வர்ணனைக் குழுவில் மஞ்ச்ரேக்கர் இடம்பெறவில்லை.

சமீப காலமாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வர்ணனையின் போது சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்தார். 2019 உலகக் கோப்பை தொடரின் போது ரவீந்திர ஜடோஜவை விமர்சனம் செய்ததார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜடோஜவும் தனது கருத்தை ஆவேசமாக பதிவிட்டார்.


சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வர்ணனை ஒரு சார்பாக இருப்பதாக கூறி ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தனர். ஐ.பி.எல் போட்டி மற்றும் உலகக்கோப்பை தொடரின் போதும் தோனியை மோசமாக விமர்சித்திருந்தார். தற்போது சக வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவை தரக்குறைவாக பேசி சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில் பி.சி.சி.ஐ வர்ணனைக் குழுவில் இருந்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
First published: March 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்