இது ஒன்னும் அவ்ளோ பெரிய வெற்றியில்லை: சஞ்சய் மஞ்ச்ரேகர்

#ViratKohli & Co's victory in #Australia wasn't India's greatest overseas triumph | ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசை மிகவும் மோசமாக இருந்ததை புரிந்துகொள்ள வேண்டும் என சஞ்சய் மஞ்ச்ரேகர் கூறியுள்ளார். #AUSvIND #SanjayManjrekar

news18
Updated: January 9, 2019, 4:48 PM IST
இது ஒன்னும் அவ்ளோ பெரிய வெற்றியில்லை: சஞ்சய் மஞ்ச்ரேகர்
இந்திய கிரிக்கெட் அணியினர், சஞ்சய் மஞ்ச்ரேகர்.
news18
Updated: January 9, 2019, 4:48 PM IST
ஆஸ்திரேலியாவில் இந்திய அணி பெற்ற வெற்றி மிகப்பெரிய  வெற்றி இல்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் விமர்சித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 விதமான கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி-20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதனை அடுத்து, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது.

டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது. 71 ஆண்டுகால தாகத்தை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தீர்த்தது.

Indian Cricket Team, இந்திய கிரிக்கெட் அணி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதல் முறையாக வென்று இந்திய அணி வரலாறு படைத்தது. (Cricket Australia)


1983-ல் இந்திய அணி உலகக்கோப்பையை முதல் முறையாக வென்றதைவிட, ஆஸ்திரேலிய மண்ணில் பெற்ற வெற்றி மிகப்பெரியது என தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகழ்ந்து தள்ளியிருந்தார். இந்நிலையில், வெளிநாட்டு மண்ணில் இது இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றி இல்லை என சஞ்சய் மஞ்ச்ரேகர் கூறியுள்ளார்.

Virat Kohli, Ravi Shastri, ரவி சாஸ்திரி
விராட் கோலியுடன் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி (Twitter/RaviShastri)


“ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசை மிகவும் மோசமாக இருந்ததை புரிந்துகொள்ள வேண்டும். அதனால், இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. இந்திய அணி நன்றாக இருந்தால், தென்னாப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து ஏன் வெற்றி பெறமுடியவில்லை?. இந்திய அணியின் பந்துவீச்சு பலமாக இருந்தது. ஆனால், பேட்டிங் பிரச்னை இருந்தது. இந்திய அணி புஜாராவே சார்ந்திருந்தது” என கடுமையாக விமர்சித்துள்ளார்.
Loading...
Sanjay Manjrekar, சஞ்சய் மஞ்ச்ரேகர்
முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர். (File)


அடிலெய்ட் டெஸ்டின் முதல் நாளில் 40 ரன்னுக்கு 4 விக்கெட்டை இந்தியா இழந்ததை நினைவுபடுத்திய அவர், இதற்கு முன் இந்தியா பெற்ற மிகப்பெரிய வெற்றிகளைப் பட்டியலிட்டார்.

வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றிகள்:

1. 1971 இங்கிலாந்தில் இந்தியா: 1-0 (3)
2. 1970/71 வெஸ்ட் இண்டீசில் இந்தியா: 1-0 (5)
3. 1986 இங்கிலாந்தில் இந்தியா: 2-0 (3)
4. 2018/19 ஆஸ்திரேலியாவில் இந்தியா: 2-1 (4)
5. 2003/04 பாகிஸ்தானில் இந்தியா: 2-1 (3)

சிட்னி வந்து சேர்ந்தது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி!

Also See..

First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...