ஆளவிடுங்கடா சாமி... ட்விட்டரிலிருந்து விலக சானியா மிர்சா முடிவு!

இந்திய அணியுடனான போட்டிக்கு முன் சாகிப் மாலிக் தனது மனைவி சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் வாஹப் ரியாஸ், இமாம்-உல்-ஹக் ஷிஷா பாருக்கு சென்ற வீடியோ வெளியானது.

ஆளவிடுங்கடா சாமி... ட்விட்டரிலிருந்து விலக சானியா மிர்சா முடிவு!
சானியா மிர்சா
  • News18
  • Last Updated: June 18, 2019, 8:11 PM IST
  • Share this:
இணையத்தில் பல எதிர்மறையான விமர்சனங்களுக்கு உள்ளானதால் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற சானியா மிர்சா ட்விட்டரிலிருந்து தற்காலிமாக விலக முடிவெடுத்துள்ளார்.

உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி மோசமான தோல்வியை சந்தித்தது. உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா அணியை இந்த முறையாவது வெல்லும் என்று எதிர்பார்த்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதனிடையே இந்திய அணியுடனான போட்டிக்கு முன் சாகிப் மாலிக் தனது மனைவி சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் வஹாப் ரியாஸ், இமாம்-உல்-ஹக் ஷிஷா பாருக்கு சென்ற வீடியோ வெளியானது. இதனால் கொதிப்படைந்த பாகிஸ்தான் ரசிகர்கள் சானியா மிர்சாவை டிவிட்டரில் தொடர்ந்து ட்ரோல் செய்து வந்தனர்.


சானியா மிர்சாவிற்கு எதிராக மீம்ஸ், விமர்சனங்கள் என ரசிகர்கள் இணையத்தில் தொடர்ந்து பதிவு செய்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக சானியா மிர்சா தனது ட்விட்டர் பக்கத்தில், “பொது இடத்தில் அனுமதி இல்லாமல் எங்களை வீடியோ எடுத்தது இணையத்தில் வெளியிட்டது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது. போட்டியில் தோற்றால்  யாரும்  சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள்“ என காட்டமாக பதிவிட்டு இருந்தார்.

அதற்கு, ஷிஷா பார் போன்ற இடத்துக்கு குழந்தையை அழைத்துச் சென்றுள்ளீர்கள். நீங்கள் ஒரு நல்ல தாயா?’ என்பது போன்று மறு கேள்வி எழுப்பி மீண்டும் கடும் விமர்சனம் செய்தனர்.

சானியா மிர்சாவின் இந்த கருத்துக்கு பலர் மீண்டும் எதிர்மறையான விமர்சனங்களை அவர்முன் வைத்தனர். சானியா மிர்சாவுடன் உணவு சாப்பிட பாகிஸ்தான் வீரர்கள் போகாமல் இருந்து இருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம், இந்தியாவின் ஏஜெண்டு போல அவர் செயல்பட்டதாக ரசிகர்கள் பலர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

பாகிஸ்தான் ரசிகர்களின் விமர்சனங்களால் விரக்தி அடைந்த சானியா மிர்சா,“ட்விட்டரில் அனைவரும் என்னை சிதைத்துவிட்டனர். அமைதியாக இருங்கள். கொஞ்சம் விலகி இருக்க வேண்டிய நேரம் இது“ என ட்வீட் செய்துள்ளார்.Also Read :அடுத்தப் போட்டியில் புவனேஸ்வர் குமாருக்கு மாற்று வீரராக இந்திய அணியில் இவர் தான்?

Also Read :காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து முக்கிய வீரர் விலகல்!

Also Watch

First published: June 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்