அபிநந்தனை கேலி செய்த பாகிஸ்தான் ஊடக விளம்பரம்... சானிய மிர்சா கருத்து!

ICC WORLD CUP 2019 | INDIA VS PAKISTAN | SANIA MIRZA | இருநாட்டினரும் தர்மசங்கடமான விளம்பரத்தை வெளியிடுகின்றனர். விளையாட்டை யாரும் விளம்பரபடுத்த தேவையில்லை.

Web Desk | news18
Updated: June 12, 2019, 5:14 PM IST
அபிநந்தனை கேலி செய்த பாகிஸ்தான் ஊடக விளம்பரம்... சானிய மிர்சா கருத்து!
ICC WORLD CUP 2019
Web Desk | news18
Updated: June 12, 2019, 5:14 PM IST
உலகக்கோப்பை தொடரில் நடைபெற உள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி தொடர்பாக வெளியாகும் சர்ச்சையான விளம்பரங்களுக்கு சானியா மிர்சா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரையிறுதி சுற்றுக்கு முன்னேற அனைத்து அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி வரும் 16-ம் தேதி நடைபெற உள்ளது. உலகக் கோப்பை வரலற்றில் பாகிஸ்தான் இந்திய அணியை வென்றதே இல்லை. இந்த முறை அந்த வரலாற்றை மாற்றிக் காட்டுவோம் என பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவர் இன்சமாம்-உல்-ஹக் சூளுரைத்துள்ளார்.


தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் தோனி ராணுவ முத்திரை பதித்த கிளவுசை அணிந்து ஆடியது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை பாகிஸ்தான் அணி கடுமையாக எதிர்த்தது. ராணுவ முத்திரை பதித்த கிளவுசை அணிய வேண்டாமென்று ஐசிசி-யும் அறிவுறுத்தியது.

இந்நிலையில் பாகிஸ்தானில் பிடிப்பட்ட விங் காமெண்டர் அபிநந்தனை கேலி செய்து அந்நாட்டை சார்ந்த ஜாஸ் டிவி விளம்பரத்தை வெளியிட்டது. அந்த விளம்பரம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த விளம்பரத்திற்கு இந்தியாவில் பெரியளவில் எதிர்ப்பு கிளம்பி யுள்ளது.இதனிடையே இந்திய டென்னிஸ் வீராங்கனையும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோகிப் மாலிக்கின் மனைவியுமான சானியா மிர்ஷா ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், “இருநாட்டினரும் தர்மசங்கடமான விளம்பரத்தை வெளியிடுகின்றனர். விளையாட்டை யாரும் விளம்பரபடுத்த தேவையில்லை.தற்போது அதிகம் கவனத்திற்கு போட்டி வந்துவிட்டது. இது வெறும் விளையாட்டு தான். ஒரு வேளை விளையாட்டை விட வேற எதையும் பெரிதாக நினைத்தால் வாழ்க்கையை தேடுங்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.

Also Watch

First published: June 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...