ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி... சானியா மிர்சாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சோயிப் மாலிக்

விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி... சானியா மிர்சாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சோயிப் மாலிக்

சானியா மிர்சா

சானியா மிர்சா

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்சா இன்று தனது 36 ஆசது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கும் ஷோகிப் மாலிக் தனது மனம் திறந்த வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • interna, Indiapakistanpakistanpakistan

  இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இன்று தனது 36 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அவரது கணவரும் கிரிக்கெட் வீரமுமான  சோயிப் மாலிக் தனது மனம் திறந்த வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

  இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்-கை திருமணம் செய்து கொண்டு பாகிஸ்தானில் வாழ்ந்து வருகிறார். சோயிப் மாலிக்-கும் சானியா மிர்சாவும் பிரியப் போகிறார்கள் என கடந்த  சில தினங்களாக செய்திகள் வெளியாகி வந்தன.

  ஆனால் அத்தனையும் பொய் என நிரூபிக்கும் வகையில் இன்று ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இன்று சானியா மிர்சா தனது 36 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நடிகை தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்ட ஃபாரா கானுடன் சேர்ந்து சானியா தனது 36 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  அதற்கு ஈடாக சானியா மிர்சாவுக்கு சோயிப் மாலிக் வாழ்த்து தெரிவித்துள்ள செய்தியும் வைரலாகி வருகிறது.

  சோயிப்  மாலிக் சானியா மிர்சாவின் தோள் மீது கைகளைப் போட்டுக் கொண்டு அவரை பாசத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, பிறந்தநாள் வாழ்த்துகள் சானியா….உடல் நலனும் மகிழ்ச்சியும் முழுமையாக கிடைக்க வாழத்துகள் என வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்து புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  சானியாவும் சோயிப் மாலிக்-கும் பிரிந்து விட்டார்கள் என்கிற செய்தி காட்டுத்தீயாய் பரவி வந்த நிலையில், பாகிஸ்தானின் முதல் OTT தளமான உருதுபிளிக்ஸ் இன்ஸடாகிராமில் ஒரு செய்தியை பகிர்ந்திருந்தார்கள். அதில் சானியாவும் சோயிப்  மாலிக்-கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விரைவில் ஒன்றாக தோன்றுவார்கள் என்கிற செய்தி தான் அது.

  Also read this: பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி போட்டியில் ஒரே வார்த்தையில் இந்திய ரசிகர்களின் இதயங்களை வென்ற பட்லர்

  ஆனாலும், அவர்களின் நெருங்கிய நட்பு வட்டாரங்கள் இருவரும் விரைவில் விவகாரத்து வாங்கிக் கொண்டு பிரிய போவதாக தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். சட்டரீதியாக பிரிவதற்கான நடைமுறைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இருவரின் விவாகரத்து குறித்த அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகும் என்றும் சானியா-மாலிலக் ஜோடிக்கு மிக நெருக்கமான நண்பர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.

  எது எப்படியோ, பிறந்தநாளான  இன்று சானியாவுக்கு பல்வேறு பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகிறார்கள். சானியாவின் நெருங்கிய தோழியும் பாடகியுமான அனன்யா பிர்லாவும் சானியாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளார். டென்னிஸ் வீராங்கனையாக இருந்தாலும் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் சானியா மிர்சா என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் ரசிகர்களும் சானியாவுக்கு தங்கள் இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Sania Mirza