2011 உலகக்கோப்பையில் தோனி மீண்டும் டாஸ் போடச் சொன்னது ஏன்? 9 வருடங்களுக்கு பின் சங்ககார கூறிய சம்பவம்

MS Dhoni | 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் 2 முறை டாஸ் போட்ட சுவாரஸ்ய சம்பவமும் அரங்கேறியது.

2011 உலகக்கோப்பையில் தோனி மீண்டும் டாஸ் போடச் சொன்னது ஏன்? 9 வருடங்களுக்கு பின் சங்ககார கூறிய சம்பவம்
சங்கக்கார
  • Share this:
2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மீண்டும் டாஸ் போட வேண்டுமென்று தோனி சொன்னது ஏன் என்று சங்ககார கூறி உள்ளார்.

2011 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டியில் மகேந்திர சிங் தோனி சிக்சர் அடித்து கோப்பையை உறுதி செய்த தருணத்தை இன்றும் யாராலும் மறக்க முடியாது. தோனியுடன் களத்தில் இருந்த யுவராஜ் சிங் முதல் பெவிலயனினின் இருந்த சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட அனைவரும் ஆனந்த கண்ணீரில் முழ்கினார்கள்.

இந்த போட்டியில் 2 முறை டாஸ் போட சுவாரஸ்ய சம்பவமும் அரங்கேறியது. டாஸ் போடுவதில் குழப்பம் ஏற்பட்டதால் மகேந்திர சிங் தோனி மீண்டும் டாஸ் போ அழைத்தார். இந்த சம்பவம் குறித்து அப்போது இலங்கை அணியின் கேப்டனாக இருந்த சங்கக்கார தற்போது நினைவு கூர்ந்துள்ளார்.


இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் உடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசிய சங்கக்கார இதனை நினைவு கூர்ந்துள்ளார். அப்போது, “2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. ரசிகர்களின் ஆரவாரத்தினால் டாஸ் போடும் போது நான் சொன்னது யாருக்கும் கேட்கவில்லை.

டாஸை நான் வெற்றி பெற்றதாக நடுவர் அறிவித்தார். ஆனால் தோனி நீங்கள் 'டெய்ல்' தானே கேட்டீர்கள் என்றார். ஆனால் நான் இல்லை 'ஹெட்' என்றேன். இதனால் ஏற்பட்ட குழப்பத்தால் தோனி மீண்டும் டாஸ் போட அழைத்தார்.

அடுத்த முறை டாஸ் போடப்பட்ட போதும் நான் 'வெஹட்' என்றேன். மீண்டும் டாஸில் நான் வெற்றி பெற்றேன். நாங்கள் இந்திய அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்ய உள்ளதாக அறிவித்தேன். ஒரு வேளை இந்திய அணி டாஸ் வென்றிருந்தாலும் முதலில் பேட்டிங் செய்திருப்பார்கள்“ என்றார்.
First published: May 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading