40% நோ-பால் வீசிய இலங்கை வீரர் - கவனிக்கத் தவறிய இந்திய அம்பையர்

சந்தாகனின் பந்துவீச்சு வித்தியாசமாக இருப்பதால், அவர் கால் வைப்பதை களநடுவர் கவனிக்க முடியாமல் போயிருக்கலாம்” என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லைய்ட் தெரிவித்துள்ளார்.

Web Desk | news18
Updated: November 26, 2018, 8:46 AM IST
40% நோ-பால் வீசிய இலங்கை வீரர் - கவனிக்கத் தவறிய இந்திய அம்பையர்
நோ-பால் வீசும் சந்தாகன்
Web Desk | news18
Updated: November 26, 2018, 8:46 AM IST
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் லக்‌ஷான் சந்தாகன், ஒரே இன்னிங்சில் 40 சதவிகிதம் நோ-பால் வீசியுள்ளார்.

இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னும் 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. நான்காம் நாள் ஆட்டம் இன்று நடக்க இருக்கும் நிலையில், அந்த அணி 54 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்த போது பந்துவீசிய இலங்கை அணியின் லக்‌ஷன் சந்தாகன், தனது ஒட்டுமொத்த பந்துவீச்சில் 40 சதவிகிதம் நோ-பால் வீசியுள்ளது அம்பலமாகியுள்ளது. எனினும், களநடுவராக இருந்த இந்தியாவைச் சேர்ந்த சுந்தரம் ரவி இவற்றை கவனிக்கத் தவறியுள்ளார்.


அம்பையர் சுந்தரம் ரவி (கோப்புப்படம்)


இங்கிலாந்து ஊடகமான ஸ்கை ஸ்போர்ட்ஸ், சந்தாகனின் மூன்றாம் நாள் பந்துவீச்சை ஆய்வு செய்துள்ளது. அதில், உணவு இடைவேளைக்கு முன்னதாக அவர் போட்ட மொத்த பந்தில், 40 சதவிகிதம் கோட்டுக்கு வெளியே கால் வைத்து போட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவற்றில் ஒன்றைக்கூட, களநடுவர் சுந்தரம் ரவி கண்டுகொள்ளவில்லை.

“சந்தாகனின் கையை சுழற்றிப்போடும் வகையிலான பந்துவீச்சு வித்தியாசமாக இருப்பதால், அவர் கால் வைப்பதை களநடுவர் கவனிக்க முடியாமல் போயிருக்கலாம்” என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லைய்ட் தெரிவித்துள்ளார்.

Loading...

போட்டியின் போது இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ், சந்தாகனின் பந்துவீச்சில் இரண்டு முறை அவுட் ஆனார். ஆனால், இரண்டு முறையும் டி.வி ரிப்ளேயில் அது நோ-பால் எனத் தெரியவந்ததால் அந்த விக்கெட் செல்லாமல் போய்விட்டது.

Also See..

First published: November 26, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...