ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

கடந்த ஆண்டு வர்ணனையாளர்... இந்த ஆண்டு தொடர் நாயகன்: சாதித்து காட்டிய சாம் கரன்!

கடந்த ஆண்டு வர்ணனையாளர்... இந்த ஆண்டு தொடர் நாயகன்: சாதித்து காட்டிய சாம் கரன்!

சாம் கரன்

சாம் கரன்

டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக பந்துவீசி 13 விக்கெட்களை வீழ்த்தி சாம் கரன் அசத்தியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  8வது டி20 உலகக்கோப்பை தொடரில் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்று சாம் கரன் அசத்தியுள்ளார்.

  மெல்போர்னில் நடைபெற்ற 8வது டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டை இழந்து 137 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகப்பட்சமாக ஹான் மசூத் 38 ரன்களும் சதப் கான் 20 ரன்களை எடுத்தனர்.

  சிறப்பாக பந்துவீசிய இங்கிலாந்து அணி சார்பில் சாம் கரன் 3 விக்கெட்டையும் அடில் ரஷித் மற்றும் கிறிஸ் ஜொர்டன் தலா 2 விக்கெட்டை எடுத்தனர்.

  இதனையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் முடிவில் 4 விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை போராடி விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து உலக்கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. மேலும் 50 ஓவர், 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் அடுத்தடுத்து வென்று நடப்பு சாம்பியனாக இங்கிலாந்து அணி மாறியுள்ளது.

  4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றிய சாம் கரன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுமட்டுமின்றி இந்த தொடர் முழுவதும் சிறப்பாக பந்துவீசி 13 விக்கெட்களை வீழ்த்தி இருந்த சாம் கரன் தொடர் நாயகன் விருதையும் தட்டி சென்றார். முன்னதாக நடப்பு டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் பட்டியல் ஒன்றை ஐசிசி வெளியிட்டது.

  இதையும் படிங்க: 82 பந்துகளில் 41 டாட் பால் : தத்தளித்த அணியை கரையேற்றி பென் ஸ்டோக்ஸ் செய்த மேஜிக்!

  அதில் ஐசிசி பரிந்துரைத்துள்ள வீரர்களிள் யார் ரசிகர்களின் அதிக வாக்குகளை பெறுகிறார்களோ அந்த வீரர் ஐசிசி தொடர் நாயகன் விருது வெல்வார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் ஐசிசி தொடர்நாயகன் விருதுக்கு விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சதாப் கான், ஷாகின் ஆப்ரிடி, சாம் கரண், ஜோஸ் பட்லர், அலெக்ஸ் கேல்ஸ், சிக்கந்தர் ராசா, ஹசரங்கா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் இறுதி போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த சாம் கரனுக்கு தொடர் நாயகர் விருந்து கிடைத்துள்ளது.

  கடந்த 2021ஆம் ஆண்டு டி20 உலக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம் கிடைக்கமால் கமெண்ட்ரி செய்த சாம் கரன் இந்தாண்டு தொடர் நாயகன் விருந்து பெற்று அசத்தியுள்ளார். அது மட்டும் இல்லாமல் டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் தொடர் விருந்து நாயகன் விருது பெற்ற அனைவருமே பேட்ஸ்மேன்கள் தான், ஷாகித் அப்ரிதி, தில்ஷன், கெவின் பீட்டர்சன், ஷேன் வாட்சன், விராட் கோலி, டேவிட் வார்னர் உள்ளிட்டோர் வரிசையில் முதன் முறையாக வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் தொடர் நாயகன் விருது பெற்று சாதனை படைத்துள்ளார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: England, T20 World Cup