ஐபிஎல் மினி ஏலத்திற்கு முந்தைய நாள் இரவு முழுவதும் தான் தூங்கவே இல்லை என கிரிக்கெட் வீரர் சாம் கரன் தெரிவித்துள்ளார்.
2020 மற்றும் 21 ஆம் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்று, சுட்டிக்குழந்தையாக வலம் வந்தவர் சாம் கரன். கடந்த ஐபிஎல் தொடரிலும் சென்னை அணியில் இடம்பெற்றிந்த போதிலும், காயம் காரணமாக விளையாட முடியவில்லை. அண்மையில், டி20 உலக கோப்பை தொடரில், பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே கலக்கி தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
இதையடுத்து, ஐபிஎல் மினி ஏலத்தின்போது, சென்னை அணியுடன் கடுமையாக போட்டிப் போட்டு, இறுதியில் பதினெட்டரை கோடி ரூபாய்க்கு சாம் கரனை தட்டித் தூக்கியது பஞ்சாப் அணி. ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்டவர் என்ற சாதனையை படைத்தார் சாம் கரன்.
இதையும் படிங்க: ஐபிஎல் ஏலத்தில் பென் ஸ்டோக்ஸை எடுத்ததால் தோனி ‘ஹேப்பி’ – சி.எஸ்.கே. நிர்வாகி தகவல்
இந்த நிலையில் அதற்கு முந்தைய நாள் இரவு, எந்த அணிக்கு செல்லப்போகிறோம்? என்ன நடக்கப் போகிறது என்ற பதற்றத்தால், தூங்காமல் தவித்ததாக தெரிவித்துள்ளார். இவ்வளவு பெரிய தொகை வரும் என எதிர்பார்க்கவே இல்லை என்றும், ஐபிஎல் கேரியரை தொடங்கிய பஞ்சாப் அணிக்கே மீண்டும் செல்வது ஆச்சரியமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL Auction, Punjab Kings