• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கோலியா வில்லியம்சனா சண்டையில் மைக்கேல் வானின் ‘சூதாடி’ வசைக்கு சல்மான் பட் பதிலடி

கோலியா வில்லியம்சனா சண்டையில் மைக்கேல் வானின் ‘சூதாடி’ வசைக்கு சல்மான் பட் பதிலடி

கவாஸ்கர்- கோலி

கவாஸ்கர்- கோலி

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியை முன்வைத்து மைக்கேல் வான் கோலியையும் வில்லியம்சனையும் ஒப்பிட்டதில் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் தலையிட்டு கோலிக்கு ஆதரவாகப் பேச சல்மான் பட்-ஐ வான், சூதாடி என்று விளிக்க, பட் பதிலடி கொடுத்தார்.

  • Share this:
    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதவுள்ள நிலையில் கோலியா, வில்லியம்சனா என்ற விவாதத்தை ஆரம்பித்து வைத்தார் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான்.

    இதில் கோலிக்கு ஆதரவாகப் பேசிய சல்மான் பட்டிறுக் பதிலடி கொடுத்த மைக்கேல் வான் அவரை சூதாடி என்று வர்ணித்தது சல்மான் பட் தரப்பில் காட்டமான எதிர்வினையைக் கிளப்பியுள்ளது.

    முதலில் வில்லியம்சனுக்கு ஆதரவாக மைக்கேல் வான் கூறும்போது, ‘இங்கிலாந்தின் சூழ்நிலைகளில் கோலி தடுமாறியுள்ளார், ஆனால் கேன் வில்லியம்சன் அதிக ரன்களை எடுக்க வாய்ப்புள்ளது. கோலிக்கு நிகரானவர், ஒருவேளை வில்லியம்சன் இந்தியராக இருந்ந்திருந்தால் கோலியை விட அதிகம் புகழப்பட்டிருப்பார்.

    வில்லியம்சனுக்கு கோலியைப் போல் சமூகவலைத்தளங்களில் லட்சக்கணக்கானோரின் ஆதரவு இல்லை. கோலியைப் போல் விளம்பரங்களில் கோடிக்கணக்கில் சம்பாதிப்பவரும் வில்லியம்சன் அல்ல’ என்று வான் வம்பிக்கிழுத்தார்.

    இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட், “கிரிக்கெட் அரங்கில் நீண்ட காலமாக சாதித்து வருகிறார் கோலி. இவருக்கு நிகராக வேறு யாரும் சதம் எடுக்கவில்லை. 70 சதங்களை சர்வதேச போட்டியில் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் ஒரு சதம் கூட எடுக்காத மைக்கேல் வான் இருவரையும் தேவையில்லாமல் ஒப்பிட்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்” என்று சல்மான் பட் பதிலடி கொடுக்க, மைக்கேல் வான் திரும்பியும் தாக்கியுள்ளார்.

    மைக்கேல் வான் தன் பதிலில், ‘சல்மான் தன் கருத்தைச் சொல்வதற்கு உரிமை உண்டு. இதே போன்ற தெளிவான சிந்தனை சூதாட்டத்தில் ஈடுபட்டபோது அவருக்கு இருந்திருக்கலாம்’ என்று குத்தலாகப் பேசினார்.

    சல்மான் பட் சும்மா இருப்பாரா, அவர் தன் பதிலடியில், “இப்படி கீழ்த்தரமாக அவர் பேச வேண்டியதில்லை. அவரது இந்தப் பதிலை நியாயப்படுத்த முடியாது. சராசரிக்கும் கீழான தரக்குறைவான பதிலாகும் இது. கடந்தகாலத்தை அவர் வேண்டுமானால் நினைத்துக் கொண்டிருக்கட்டும். சிலருக்கு மனச்சிக்கல் உள்ளது. அவர்கள் மனம் கடந்த காலத்தை தாண்டி நகராது, பரவாயில்லை” என்று கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: