போட்டியில் வெற்றி பெற்றால் தான் சம்பளம் - கிரிக்கெட் வாரியம் அதிரடி

கோப்பு படம்

வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியுடன் மலிங்கா ஓய்வு பெறும் நிலையில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளார் குலசேகரா இந்த தொடருடன்ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இலங்கைக் கிரிக்கெட் அணி போட்டிகளில் வெற்றி பெற்றால் தான் சம்பளம் வழங்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைத் தொடரில் இலங்கை அணி மோசமான தோல்விகளைச் சந்தித்து அரையிறுதி முன்னேறாமல் லீக் சுற்றுகளோடு நடையைக் கட்டியது. இதனால் இலங்கை அணி மீதான விமர்சனம் அதிகரித்தது. அணியில் அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது.

இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் சண்டிக்க ஹத்துறுசிங்கவை மாற்றுமாறு விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்னான்டோ கேட்டு கொண்டார். அதன்படி வங்கதேச அணிக்கு எதிரான தொடருக்கு பின் இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணி


வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியுடன் மலிங்கா ஓய்வு பெறும் நிலையில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளார் குலசேகரா இந்த தொடருடன்ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்னான்டோ கொழும்புவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “வங்கதேசத் தொடரின் கடைசி ஒரு நாள் போட்டியை குலசேகர பெயரில் நடத்துமாறு கிரிக்கெட்டை வாரியத்தை கேட்டு கொண்டு உள்ளேன்.இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான மஹேள ஜயவர்தனே மற்றும் குமார் சங்கக்கரா உள்ளிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்களின் யோசனைகளுடன் தயாரிக்கப்பட்ட கிரிக்கெட் வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தேன்” என்று கூறியுள்ளார்.

Also Read:  ஒரு நாள் போட்டிகளில் இந்த வீரர்களை தேர்வு செய்யாதது வியப்பாக உள்ளது - கங்குலி

Also Read : பிசிசிஐ-யின் அட்டகாசமான ஐடியாவை ஏற்றது ஐசிசி...! கிரிக்கெட்டில் மிகப் பெரிய மாற்றம்

Published by:Vijay R
First published: